'பல பெண்களின் வாழ்க்கை சமையலறையிலேயே கழிந்து விடுகிறது'- பட விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆதங்கம்!

By manimegalai aFirst Published Jan 25, 2023, 6:40 PM IST
Highlights

இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் "தி கிரேட் இந்தியன் கிச்சன்". விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பல பெண்களின் வாழ்க்கை சமையல் அறையிலேயே கழிந்து விடுவதாக, ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.

மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற, 'தி கிரேட் இந்தியன் கிட்சன்' படம் அதே பெயரிலேயே ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தமிழில் இந்த படத்தை இயக்கியுள்ள இயக்குநர் ஆர்.கண்ணன் பேசும்போது, 12 படங்கள் இயக்கியிருக்கிறேன் என்றால் அதற்கு உங்களுடைய ஆதரவு தான் காரணம். சுஹாசினி மேடம் பேச்சு எளிமையாக, தெளிவாக இருந்தது. கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் சுஹாசினி மேடம் தான் என்னை உதவி இயக்குநராக மணி சாரிடம் சேர்த்துவிட்டார்.

இன்று வேகமாக இயக்குகிறேன் என்றால், மணி சாரிடம் கற்றுக் கொண்டது தான் காரணம். காலை 6.30 மணிக்கெல்லாம் முதல் ஷாட் எடுத்து விடும் பழக்கம் கொண்டவர் மணி சார் . மிலிட்டரி வீரர் போல உழைப்போம். அன்று கற்று கொண்டது.. இன்று வேகமாக நல்ல படங்களை எடுக்க முடிகிறது.  எல்லா அம்சங்களும் இல்லாமல் இறுக்கமாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நன்றி. மலையாளத்தில் நிமிஷா சிறப்பாக நடித்திருந்தார். அதை ஐஸ்வர்யா ராஜேஷ் சரியாகப் புரிந்துகொண்டு சிறப்பாக நடித்திருந்தார். நல்ல படங்கள் ஐஸ்வர்யாவிடம் செல்வதற்கு அவருடைய ஈடுபாடு தான்.

விஜய் மக்கள் இயக்கத்தினரின் செயலை தாறுமாறாக புகழ்ந்து தள்ளிய கன்னட மேயர்.! செம்ம குஷியான ரசிகர்கள்!

ஒளிப்பதிவாளர் பாலு சார் பிறர் கேட்காமலேயே உதவி செய்வார். திறமைகள் நிறைய உடைய அற்புதமான மனிதர். 20 வருடங்கள் கழித்தும் அவர் முன்னணி ஒளிப்பதிவாளராக இருப்பார். எது வேண்டுமோ அதை சண்டைப் போட்டு வாங்கிக் கொள்வார்.  ஜீவிதா, ஹிருதயாவிற்கு நன்றி. ஒரு முக்கியமான காட்சியில் சிறப்பாக நடித்திருக்கிறார் கலைராணி. போஸ்டர் நந்தகுமார் சார் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அவரின் நடிப்பைப் பார்த்து என் மனைவிக்கு அவரை அடிக்கும் அளவிற்கு கோவம் வந்தது. நான் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களில் ஜான்சன் சாரும் ஒருவர்.

Hansika:கல்யாணத்திற்கு பிறகும் கவர்ச்சி கும்மாளம்..! ஸ்ட்ராப்லெஸ் உடையில் சூடேற்றிய ஹன்சிகாவின் ஹாட் போட்டோஸ்!

இப்படத்தின் இசைத்தட்டை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சுஹாசினி மேடம் வெளியிட எனது மனைவி மது கண்ணன் பெற்றுக் கொள்வார். எனது மனைவி உண்மையாகவே தி கிரேட் இந்தியன் கிச்சன் தான் என்றார்.

இவரை தொடர்ந்து பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்,  இந்த நிகழ்ச்சிக்கு வருகைப் புரிந்த சுஹாசினி மேடமிற்கு நன்றி. இயக்குநர் கண்ணன் ஒரு படத்தை மறுஉருவாக்கம் செய்ய வேண்டும் என்று கேட்கும்போது, முதலில் தயங்கினேன். படம் பாருங்கள் என்று கூறியதும் பார்த்தேன். மறுஉருவாக்கம் என்றாலே ஒப்பீடு வரும். அதேபோல், எனக்கும் ஒப்பீடும், குழப்பமும் இருந்தது. 2, 3 நாட்கள் என் அம்மாவை கவனித்தேன். சமையலறைக்கு செல்வார், வேலை பார்ப்பார் திரும்ப வருவார். இதையே தொடர்ந்து செய்துக் கொண்டிருந்தார். ஆனால், இத்தனை ஆண்டுகளாக நான் இதை கவனித்ததே இல்லை. அன்று தான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

பிக்பாஸ் ஆயிஷாவிற்கு விரைவில் திருமணமா? வித்தியாசமாக காதலரை அறிமுகம் செய்த நடிகை! வைரலாகும் புகைப்படம்!

மேலும், கிராமத்தில் இருக்கும் பெண்களின் முழு வாழ்க்கையும் சமையலறையிலேயே கழிந்து விடுகிறது. அதற்காகவே இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்த வாய்ப்பை கொடுத்த இயக்குநர் கண்ணன் சாருக்கு நன்றி. நிமிஷாவின் நடிப்பை 50 சதவிகிதம் நடித்திருந்தாலே நான் சந்தோஷப்படுவேன். என்னை அழகாக காட்டியிருந்ததற்கு நன்றி. எனக்கு ஜோடியாக நடித்த ராகுல் ஒரு இயக்குநர். இந்த படத்தில் நடிக்கும் போது நான் இதுபோன்ற ஆள் இல்லை என்று கூறினார். இதுபோன்ற சிறந்த படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றார்.

நடிகை கலைராணி பேசும்போது, இப்படத்தை மலையாளத்தில் பார்த்து வியந்தேன். சமையலறை முக்கிய பாத்திரமாக இருந்தது. ஆண்களுக்கு சமையலறையில் வேலை இல்லை என்று நினைக்கிறார்கள். ஆனால், எந்தளவிற்கு சிரமத்திற்குள்ளாகிறார்கள் என்று யதார்த்தமாக இருந்தது. பெண்களும் சிறு சிறு விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அதேபோல, ஆண்களும் சமையலறையில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்.

கண்ணன் சாருடன் இரண்டாவது முறை நடிக்கிறேன். அவர் எப்போதுமே கலைஞர்களை குடும்பமாக  வைத்துக் கொள்வார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷை மிகவும் சிரமப்படுத்தியிருக்கிறேன்.. கதைக்காக.. என்று கூறியுள்ளார்.

click me!