'தி ஃபேமிலி மேன் 2 ' வெப் சீரிஸ் சர்ச்சை..! முதல் முறையாக மன்னிப்பு கேட்ட சமந்தா..!

By manimegalai aFirst Published Aug 26, 2021, 11:23 AM IST
Highlights

தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக, நடிகை சமந்தா நடிப்பில் வெளியான வெப் தொடர் 'தி ஃபேமிலி மேன் 2 ' . இந்த வெப் சீரிஸில்...  தான் நடித்த கதாபாத்திரம் யார் மனதையேனும் புண் படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்பதாக கூறியுள்ளார் சமந்தா.
 

தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக, நடிகை சமந்தா நடிப்பில் வெளியான வெப் தொடர் 'தி ஃபேமிலி மேன் 2 ' . இந்த வெப் சீரிஸில்...  தான் நடித்த கதாபாத்திரம் யார் மனதையேனும் புண் படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்பதாக கூறியுள்ளார் சமந்தா.

இயக்குனர் ராஜ் மற்றும் டீகே ஆகியோர் இணைந்து இயக்கி இருந்த 'தி ஃபேமிலி மேன்' இணையதள தொடரின் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, இதன் இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டது. குற்றச் செயல்களை கண்டறிந்து தடுப்பது போலவும், சென்னையில் குண்டு வெடிப்பிற்கு இலங்கையைச் சேர்ந்த தீவிரவாதிகள் திட்டமிட படுவது போன்றும் காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருந்தன.

இதில் இலங்கையைச் சேர்ந்த தீவிரவாத தமிழ் பெண்ணாக சமந்தா நடித்திருந்தார். இந்த வெப் சீரிஸின் ட்ரைலர் வெளியான போதே, இந்த   வெப் சீரிஸுக்கு தடை விதிக்க வேண்டும் என தொடர்ந்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. குறிப்பாக இயக்குனரும், 'நாம் தமிழர் கட்சியின்' ஒருங்கிணைப்பாளருமான சீமான், தமிழர்களை தவறாக இந்த வெப் சீரிஸ் சித்தரித்துள்ளதாக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்து அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

பல்வேறு தடைகளை மீறி நடிகை சமந்தா முதல் முறையாக நடித்திருந்த இந்த வெப் தொடர் ஜூன் 4 ஆம் தேதி வெளியான போது, தமிழகத்தில் பலரும் நடிகை சமந்தாவின் கதாபாத்திரத்திற்கு தொடர்ந்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். அதே நேரத்தில் நடிகை சமந்தாவின் நடிப்பு பரவலாக பாராட்டுக்களை குவித்தது. சமீபத்தில் கூட, மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் இந்த வெப் தொடருக்காக சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார் சமந்தா.

இந்த வெப் தொடரில் நடித்தது குறித்து தொடர்ந்து மௌனம் சாதித்து வந்த சமந்தா முதல் முறையாக சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு கொடுத்த பேட்டியில் இது குறித்து பேசியுள்ளார். "அதில்... யாருடைய மனதையும் புண் படுத்தவேண்டும் என்கிற நோக்கத்தில் நான் நடிக்க வில்லை. ராஜி என்கிற கதாபாத்திரத்தில் முழு ஈடுபாட்டுடன் நடித்தேன். என்னுடைய நடிப்பு யாருடைய மனதையாவது புண் படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார்'. 


 

click me!