செப்.9ல் “லாபம்” ரிலீஸ்... கொடுத்த வாக்கை காப்பாற்றிய விஜய் சேதுபதி!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Aug 26, 2021, 10:36 AM IST
செப்.9ல் “லாபம்” ரிலீஸ்... கொடுத்த வாக்கை காப்பாற்றிய விஜய் சேதுபதி!

சுருக்கம்

விஜய் சேதுபதி நிச்சயம் படம் தியேட்டரில் தான் வெளியாகும் என அடித்துக்கூறி வந்தார். 

நடிகர் விஜய் சேதுபதி 7 சி என்டர்டெயின்மெண்ட் நிறுவதுடன் இணைந்து தயாரித்து வந்த 'லாபம்' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக  உயிரிழந்தார். எனவே லாபம் திரைப்படம்  ரிலீஸாகுமா? என்கிற சந்தேகம் எழுந்தது. ரசிகர்களின் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தயாரிப்பு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. 

அதில், இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் படங்களில் தொனிக்கும் கருத்துக்களும், ஒலிக்கும் போராட்ட குரலும், என்றைக்கும் முடிவு கிடையாது. அவருடைய படங்களில் வெளிப்படுத்தியுள்ள கருத்துக்கள் யாவும் காலத்துக்கும் பொருந்திப் போகக் கூடியவை. எங்கள் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனுக்கு மணிமகுடமாகவும், அவரின் ரசிகர்களுக்கான திரைப்படமாகவும் லாபம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று அறிக்கையை வெளியிட்டுள்ளது 'லாபம்' படத்தின் தயாரிப்பு நிறுவனம். இதில் இருந்து குறித்த தேதியில் அடுத்த மாதம், மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் கனவு படைப்புகளில் ஒன்றான, 'லாபம்' திரைப்படம் வெளியாவது உறுதியாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டது. 

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், ஓடிடி தளத்தில் படத்தை வெளியிடப்போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் விஜய் சேதுபதி நிச்சயம் படம் தியேட்டரில் தான் வெளியாகும் என அடித்துக்கூறி வந்தார். இந்நிலையில்  தமிழக அரசு தற்போது கொரோனா விதிமுறைகளை பின்பற்றி ஐம்பது சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்கினை திறக்க அனுமதி அளித்துள்ளது. எனவே செப்டம்பர் 9ம் தேதி லாபம் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?