அந்த ஒரே ஒரு குறையும் இனி இல்ல... ‘சார்பட்டா பரம்பரை’ படம் குறித்து வெளியான குட் நியூஸ்!

By Kanimozhi PannerselvamFirst Published Aug 25, 2021, 11:11 PM IST
Highlights

சார்பட்டா பரம்பரை திரைப்படம் திமுகவிற்கு சப்போட்டா எடுக்கப்பட்டதாகவும், அதில் எம்.ஜி.ஆர். குறித்து அவதூறு பரப்பும் வகையில் உள்ளதாகவும் அதிமுக தரப்பில் குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. 

தமிழில் வெளியான விளையாட்டு தொடர்பான பல்வேறு படங்களுக்கும் மசூடம் சூட்டும் வகையில் ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் பாராட்டுக்களை குவித்து வருகிறது. பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான  ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் கடந்த வாரம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்தப் படத்தில், துஷாரா விஜயன், கலையரசன், பசுபதி மற்றும் சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பதை விட வாழ்ந்துள்ளனர் என்றும் சொல்லும் அளவிற்கு அசத்தியிருந்தனர்.

இயக்குநர் பா.ரஞ்சித் 1970களுக்கு பிற்பகுதியில் வடசென்னையில் பிரபலமாக இருந்த பாக்ஸிங் கலாச்சாரத்தை கண்முன் காட்டியுள்ளதாக ரசிகர்கள் சோசியல் மீடியாவில் புகழ்ந்து வருகின்றனர். கபிலன், ரங்கன் வாத்தியார், வெற்றிச்செல்வன், வேம்புலி, டான்சிங் ரோஸ், மாரியம்மா, டாடி என பல்வேறு கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் நீங்காமல் இடம்பிடித்துள்ளது. சோசியல் மீடியாவில் இன்றளவும் சார்பட்டா பரம்பரை படம் மீதான ரசிகர்களின் பாசிட்டிவ் கருத்துக்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றன. 

சார்பட்டா பரம்பரை திரைப்படம் திமுகவிற்கு சப்போட்டா எடுக்கப்பட்டதாகவும், அதில் எம்.ஜி.ஆர். குறித்து அவதூறு பரப்பும் வகையில் உள்ளதாகவும் அதிமுக தரப்பில் குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இது தொடர்பாக  இயக்குனர் பா. ரஞ்சித் மற்றும் அமேசான் ப்ரைம் நிறுவனத்திற்கு அதிமுக நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தில் இருந்த ஒரே ஒரு குறையும் நிவர்த்தி செய்யும் விதமாக குட் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சார்பட்டா பரம்பரை திரைப்படத்தினை திரையரங்குகளில் பார்க்க முடியாதா என்று ரசிகர்கள் இணையத்தில் கோரிக்கை வைத்து வந்தனர்.  தற்போது கொரோனா அலை குறைந்து வரும் நிலையில், திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திரையரங்கில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

click me!