சிம்பு மீதான ரெட் கார்டு விவகாரம்..! தயாரிப்பாளர் சங்கம் எடுத்த அதிரடி முடிவு..!

By manimegalai aFirst Published Aug 26, 2021, 10:42 AM IST
Highlights

இந்நிலையில் மீண்டும் இந்த பிரச்சனை கொழுந்து விட்டு ஏரியாவே... சிம்பு தரப்பில் இருந்தும், தயாரிப்பாளர் சங்கத்தின் தரப்பிலிருந்தும் நடத்திய பேச்சுவார்த்தையில் தற்போது உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே சிம்புவுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த ரெட்கார்டை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நீக்கியுள்ளது. 

நடிகர் சிம்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்து கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' .  இந்தப் படத்தில் நடிக்க தனக்கு, சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் சிம்பு மீது தொடர்ந்து பல குற்றச்சாட்டுக்களை வைத்தனர். மேலும் சிம்பு படத்தில் நடிக்க கமிட் ஆனதும் ரூ.2 கோடி அட்வான்சாக பெற்றுக்கொண்டு, படப் பிடிப்பில் சரியாக ஒத்துழைக்காததுடன், அவருடைய இஷ்டத்திற்கு படத்தின் கதையை மாற்றி அமைத்தார் அதன் காரணமாகத் தான் படம் தோல்வியைச் சந்தித்தது என்று கூறியுள்ளனர்.

இதற்க்கு சிம்பு , 'AAA ' திரைப்படம் வெளியே வந்துவிட்டது. அது முடிந்து போன கதை. அதனால் இது குறித்து நான் யாருக்கும் பதில் கூற வேண்டிய  அவசியம் இல்லை. முதலில் அவர்கள் எனக்குத் தர வேண்டிய ரூ.3.5 கோடி பணத்தைப் பெற்றுத் தருமாறு நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தார். தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும், சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் இது குறித்து புகார் அளிக்கவே, சிம்புக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது.

மேலும், தற்போது சிம்பு நடித்து வரும் 'வெந்து தணிந்தது காடு' படத்திற்கு, பெப்சி தொழிலாளர்கள் ஒத்துழைப்பு தராததற்கு சிம்புவின் தாய் உஷா டி.ராஜேந்தர் மிகவும் ஆவேசமாக பேசி வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதில் தன்னுடைய மகன் இந்த படத்திற்காக சம்பளமே பெறவில்லை என்றும், அவர் நடித்து வெளியாகும் ஒவ்வொரு படத்திற்கும் சுமார் 2 கோடி மைக்கேல் ராயப்பனுக்கு கப்பம் கட்டி வருவதாக கூறி இருந்தார். இதற்க்கு மைக்கேல் ராயப்பன், உஷா டி.ராஜேந்தர் கூறியது அனைத்தும் முழுக்க முழுக்க பொய் என்பது போன்று அவரது விளக்கத்தை மறுத்தார்.

இந்நிலையில் மீண்டும் இந்த பிரச்சனை கொழுந்து விட்டு ஏரியாவே... சிம்பு தரப்பில் இருந்தும், தயாரிப்பாளர் சங்கத்தின் தரப்பிலிருந்தும் நடத்திய பேச்சுவார்த்தையில் தற்போது உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே சிம்புவுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த ரெட்கார்டை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நீக்கியுள்ளது. மேலும் சிம்பு தற்போது இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் நடித்து வரும்,'வெந்து தணிந்தது காடு' படத்திற்கும் பெப்சி தொழிலாளர்கள் முழு ஒத்துழைப்பு தருவார்கள் என கூறப்பட்டுள்ளது. 

click me!