Annamalai Wished Vijay : நடிகர் விஜய் "தமிழக வெற்றி கழகம்" என்ற தனது கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இன்று பிப்ரவரி 2ம் தேதி தளபதி விஜய் அவர்களுடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்திருக்கிறது. அவருடைய "தமிழக வெற்றி கழகம்" என்கின்ற அரசியல் கட்சியை "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்கின்ற வாக்கியத்தோடு துவங்கியுள்ளார் தளபதி விஜய். அவர் வெளியிட்ட பதிவில் இதுவரை விஜய் மக்கள் இயக்கம் பல வருடங்களாக தங்களால் இயன்ற பல்வேறு நலத்திட்டங்களை சமூக சேவைகளை நிவாரண உதவிகளை செய்து வந்தது.
ஆனால் முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டு வர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாது. ஆகவே அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது என்று முழங்கி தனது அரசியல் வருகையை அறிவித்திருக்கிறார் தளபதி விஜய் அவர்கள். மேலும் அவர் ஒப்புக்கொண்டுள்ள அவரது 69வது பட பணிகளை முடித்த பிறகு அத்தோடு தனது திரை வாழ்க்கைக்கும் அவர் முற்றுப்புள்ளி வைக்கின்றார்.
undefined
ரஜினி - கமலை விட விஜய் எவ்வளவோ மேல்! ஆனால் இது யாருக்கு எதிரான அரசியல்? ப்ளூ சட்டை போட்ட நச் பதிவு!
தளபதி விஜய் அவர்களுடைய அரசியல் நுழைவு மிகப்பெரிய முன்னெடுப்பாக பார்க்கப்படும் நிலையில் பல்வேறு பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை "தமிழக வெற்றி கழகம்" தலைவர் விஜய் அவர்களுக்கு தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பேசியுள்ளார் தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை அவர்கள்.
அவர் வெளியிட்ட பதிவில் "தமிழக மக்களை சுரண்டி கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காக பணியாற்ற தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் புது கட்சி தொடங்கியிருக்கும் சகோதரர் விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான, அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காகப் பணியாற்ற, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும் சகோதரர் திரு அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி… https://t.co/oYP8IfDyxn
— K.Annamalai (@annamalai_k)அதேபோல அதிமுகவை சேர்ந்த ஜெயகுமார் அவர்கள் அரசியல் என்பது ஒரு மாபெரும் சமுத்திரம், இதில் மூழ்கியவர்களும் உண்டு கரை ஒதுங்கியவர்களும் உண்டு. விஜய் மூழ்குகிறாரா அல்லது கரை சேர்கிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் தளபதி விஜய் அவர்களுடைய அரசியல் வருகையை பெரிய அளவில் வரவேற்றுவது குறிப்பிடத்தக்கது.