பெயரில் திராவிடம் இல்லாததே பெரிய மாறுதல்தான்... விஜய்யின் அரசியல் எண்ட்ரி குறித்து சீமான் சொன்னதென்ன?

By Ganesh A  |  First Published Feb 2, 2024, 2:56 PM IST

தளபதி விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் அதுபற்றி சீமான் பேசி இருக்கிறார்.


நடிகர் விஜய் தற்போது அரசியலில் குதித்துள்ளார். தன்னுடைய கட்சிக்கு தமிழக முன்னேற்ற கழகம் என பெயரிட்டுள்ள விஜய், அதுகுறித்த அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளார். மேலும் அரசியலில் முழுமையாக ஈடுபட முடிவெடுத்துள்ளதால் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்றும் அறிவித்து இருக்கிறார். நடிகர் விஜய்யின் இந்த அதிரடி முடிவு சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகவே உள்ளது.

சினிமாவில் தன்னுடைய திறமையால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவர்ந்த விஜய், அரசியலிலும் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்துவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். விஜய் அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளதை அடுத்து தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்கின்றனர்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்.... தளபதியின் ‘தமிழக வெற்றி கழகம்’... கட்சி பெயருடன் பட்டாசாய் அரசியல் எண்ட்ரியை அறிவித்த விஜய்

மறுபுறம் விஜய்யின் அரசியல் எண்ட்ரி குறித்து அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவராக தங்கள் கருத்துக்களை பகிர்ந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இதுபற்றி கூறுகையில், தமிழக வெற்றி கழகம், என்கிற பெயர் நன்றாகவே இருக்கிறது; வரவேற்கிறேன். கட்சி பெயரில் திராவிடம் என்று இல்லாததே பெரிய மாறுதல் தான். அவருக்கான வாக்களர்கள் அவருக்கு, எனக்கான வாக்காளர்கள் எனக்கு என சீமான் கூறி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்.... இனி ஒன்லி அரசியல்.... சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்தார் விஜய் - அப்போ கடைசி படம் இதுதானா?

click me!