தளபதி 66 பட ஹீரோயின் இவரா? தீயாக பரவும் தகவல்..!

Published : Oct 12, 2021, 03:09 PM ISTUpdated : Oct 12, 2021, 03:13 PM IST
தளபதி 66 பட ஹீரோயின் இவரா? தீயாக பரவும் தகவல்..!

சுருக்கம்

தளபதி விஜய் (Vijay) தற்போது 'பீஸ்ட்' (Beast movie) படத்தில் நடித்து வரும் நிலையில், இந்த படத்தை தொடர்ந்து விஜய் நடிக்க உள்ள 66 ஆவது படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ள ஹீரோயின் (Heroine) குறித்த தகவல் ஒன்று, தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.  

தளபதி விஜய் தற்போது 'பீஸ்ட்' படத்தில் நடித்து வரும் நிலையில், இந்த படத்தை தொடர்ந்து விஜய் நடிக்க உள்ள 66 ஆவது படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ள ஹீரோயின் குறித்த தகவல் ஒன்று, தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.

மேலும் செய்திகள்: அக்கா ஸ்ருதி மற்றும் தந்தை கமல்ஹாசண்டு பிறந்தநாள் கொண்டாடிய அக்ஷரா..! வைரலாகும் புகைப்படம்..!

தளபதி விஜய் தற்போது 'கோலமாவு கோகிலா', 'டாக்டர்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் முதல்முறையாக இணைந்து 'பீஸ்ட்'  படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை ஜார்ஜியாவில் நடத்திய படக்குழு, இரண்டு, மற்றும் மூன்றாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தினர்.

நான்காவது கட்ட படப்பிடிப்புக்காக, சமீபத்தில் டெல்லி சென்ற படக்குழு, படப்பிடிப்பை முடித்து கொண்டு தற்போது சென்னை திரும்பியுள்ளது. மேலும் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு தேவையான பணிகளில் கவனம் செலுத்தி வருவதாகவும், விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: நாகசைதன்யாவுக்கு எங்களுக்கு என்ன உறவு என்பது நன்றாக தெரியும்? வேதனையோடு பேசிய ப்ரீத்தம் ஜூகால்கர்..!

 

இந்நிலையில் இந்த படம் நிறைவடைவதற்கு முன்பாகவே, தளபதி விஜய் தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்கவுள்ள படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை சமீபத்தில் வெளியிட்டனர். விஜயின் 66 வது படமாக உருவாகும் இந்தப் படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். மேலும் இந்த இந்த படத்தில் நடிக்கவுள்ள நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தன்னுடைய அறிக்கை மூலம் தெரிவித்திருந்தது.

மேலும் செய்திகள்: ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் அட்டை படத்தில் நடிகை நயன்தாரா..! வேற லெவெல் அழகில் தெறிக்க விட்ட புகைப்படம்..!

அவ்வப்போது இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர் நடிகைகள் பற்றிய தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில், தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் (Keerthi Suresh) இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க நிறைய வாய்ப்புள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. ஏற்கனவே விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், பைரவா, மற்றும் சர்க்கார் ஆகிய படங்களை தொடர்ந்து இந்த படத்தில் இணைவாரா? அல்லது இதுவும் வதந்தியாக கடந்து செல்லுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?