அண்ணன் வரார் வழிவிடு.. IMAXல் கெத்தாக என்ட்ரி கொடுக்கும் தளபதி விஜய் - லியோ படக்குழு வெளியிட்ட அப்டேட்!

By Ansgar R  |  First Published Sep 18, 2023, 5:26 PM IST

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக விளங்கும் தளபதி விஜயின் லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படம் குறித்த அப்டேட்கள் ஒன்றின் பின் ஒன்றாக வரத்துவங்கியுள்ளன.


இந்நிலையில் லியோ திரைப்படத்தின் லண்டன் நகர விநியோகஸ்த நிறுவனமான அஹிம்ச என்டர்டைன்மென்ட் நிறுவனம் தளபதி விஜய் அவர்களின் லியோ திரைப்படம் குறித்த ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி imax தளத்தில் வெளியாகும் தளபதி விஜயின் முதல் திரைப்படம் லியோ என்றும். தமிழ் மொழியில், imaxல் வெளியாகும் மூன்றாவது திரைப்படமாக இது விளங்கும் என்றும் அறிவித்துள்ளது.

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பாக லலித் குமார் தயாரிக்கும் லியோ திரைப்படத்தில் பிரபல நடிகை திரிஷா, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மூத்த தமிழ் நடிகரும், இயக்குனருமான அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்திருக்கின்றனர். 

Tap to resize

Latest Videos

மாஸ் காட்ட ஒரு ஜெயிலர்.. கிளாசிக் ஸ்டைலுக்கு ஒரு லால் சலாம்.. ரெடியான விநாயகர் - மண்பாண்ட கலைஞர் அசத்தல்!

பிரபல இயக்குனரும் நடிகருமான மிஸ்கின் அவர்களும் இந்த திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று இந்த திரைப்படத்தின் தெலுங்கு மொழி போஸ்டர் ஒன்று வெளியான நிலையில், இன்று கன்னட மொழிக்கான போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்பே இந்த திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியதைப் போல, படம் வெளியாவதற்கு இன்னும் ஒரு மாத காலமே இருக்கும் நிலையில், இனி தொடர்ச்சியாக லியோ திரைப்படம் குறித்த அப்டேட்கள் வரும் என்று நம்பப்படுகிறது.

 

There's big, there's bigger… and then there's 's FIRST EVER film on IMAX! UK, feel every moment of like never before. Ticket updates to follow.. 🔥🧊

And heads up — news from is on its way.. konjam chill pannu maapi ❤️😌 pic.twitter.com/vqWdbYQq9H

— Ahimsa Entertainment (@ahimsafilms)

லியோ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் IMAX திரைக்கென்று பிரத்தியேகமாக லியோ திரைப்படம் முழுமையும் படமாக்கப்பட்டுள்ளது. லியோ படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தனது அடுத்த பட பணிகளை விரைவில் துவங்கவுள்ளார். 

இனி ஆக்டர் மட்டுமில்ல... டீச்சரும் கூட! யோகா டீச்சர் ஆனார் ரம்யா பாண்டியன்

click me!