விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வெளிவந்த நயன்தாராவின் அடுத்த பட அறிவிப்பு... அதுவும் விக்கி டைரக்‌ஷன்ல..!

By Ganesh A  |  First Published Sep 18, 2023, 12:44 PM IST

ஜவான் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை நயன்தாரா நடிக்க உள்ள புதிய படத்திற்கான டைட்டில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து கலக்கி வந்த நயன்தாரா, அண்மையில் அட்லீ இயக்கத்தில் வெளியான ஜவான் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார் நயன்தாரா. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஜவான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.800 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து உள்ளது.

ஜவான் படத்தின் வெற்றிக்கு பின்னர் தற்போது தமிழில் தன்னுடையை முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் நயன்தாரா. அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் இறைவன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 28-ந் தேதி திரைக்கு வர உள்ளது. அஹமத் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார் நயன்தாரா. இதுதவிர மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2, லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ஒரு படம் என அவர் கைவசம் எக்கச்சக்கமான படங்கள் உள்ளன.

Latest Videos

இதையும் படியுங்கள்... செல்லும் இடமெல்லாம் சர்ச்சை... யார் இந்த TTF வாசன்? சப் இன்ஸ்பெக்டரின் மகன் யூடியூபர் ஆனது எப்படி?

அந்த வகையில், பிரபல யூடியூபரான டியூடு விக்கி என்பவர் இயக்க உள்ள படத்தில் ஹீரொயினாக நடிக்க கமிட் ஆகி உள்ளார் நயன்தாரா. கார்த்தியின் சர்தார் படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படத்திற்கான டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை விநாயகர் சதுர்த்தி தினமான இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி டியூடு விக்கி இயக்கத்தில் நயன்தாரா, நடிக்க உள்ள படத்திற்கு மண்ணாங்கட்டி என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர். தலைப்பே வித்தியாசமாக உள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது.

இதையும் படியுங்கள்... SMS டைரக்டர்.. டாக்டர் ஹீரோயின்.. ஹாரிஸ் இசை! புது கூட்டணியில் ஜெயம் ரவி.. பர்ஸ்ட் லுக் உடன் வெளிவந்த டைட்டில்

click me!