தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் நேற்று அக்டோபர் 19ஆம் தேதி வெளியான லியோ திரைப்படம், உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்பொழுது வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் தற்பொழுது most wanted இயக்குனராக மாறியுள்ள லோகேஷ் கனகராஜ் அவர்களுடைய இயக்கத்தில் இரண்டாவது முறையாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் லியோ. நேற்று அக்டோபர் 19ஆம் தேதி உலக அளவில் இந்த திரைப்படம் வெளியான நிலையில், இந்திய அளவிலும், உலக அளவிலும் பல்வேறு பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.
குறிப்பாக இந்த திரைப்படம் லோகேஷ் கனகராஜின் எல்சியு-விற்குள் வந்துள்ளது, விஜய் அவர்களுடைய ரசிகர்களை பெரிதும் மகிழ்ச்சிபடுத்தி உள்ளது. இந்த திரைப்படத்தில் பலரும் எதிர்பாராத விதத்தில் பல சுவாரசியமான காட்சிகளை அமைத்து லோகேஷ் கனகராஜ் தன்னுடைய திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் என்று தான் கூற வேண்டும்.
தெலுங்கில் விஜய்க்கு இவ்வளவு மவுசா... பாலய்யா படத்தையே பாக்ஸ் ஆபிஸில் பஞ்சராக்கி பறக்கவிட்ட லியோ
நடிகை திரிஷா பல ஆண்டுகள் கழித்து தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து நடித்த நிலையில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் உலக அளவில் இந்த திரைப்படத்திற்கான முதல் நாள் வசூல் குறித்த தகவலை தற்பொழுது வெளியிட்டுள்ளது இந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான Seven Screen Studios.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அதன்படி உலக அளவில் லியோ திரைப்படம் சுமார் 148.5 கோடி ஈட்டி உள்ளதாகவும், முதல் நாள் வசூலில் இந்திய அளவில் லியோ திரைப்படம் தான் இவ்வளவு பெரிய வசூலை பெற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கேரளா மற்றும் தமிழகத்தில் பட்டையை கிளப்பி வரும் லியோ திரைப்படம் உலக அளவில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
Hello records..
He broke you down 🔥
You couldn’t last a day 😎 first day worldwide gross collection is 148.5 crores+ 💥
HIGHEST DAY 1 WORLDWIDE GROSS COLLECTION OF THE YEAR FOR AN INDIAN FILM 🤜🤛 sir … pic.twitter.com/ssC1Vk5RIx
தனது லியோ பட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் தனது அடுத்த திரைப்பட பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர்கள் பிரசாந்த் பிரபுதேவா உள்ளிட்ட பலர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. சவுத் ஆப்பிரிக்கா நாட்டில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படுகிறது.