பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்த நடிகை பூஜா ஹெக்டே, அவருடன் சேர்ந்து புட்ட பொம்மா பாடலுக்கு நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் தனது 49-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். விஜய்யின் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டனர். ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கியது, இலவச பேருந்து இயக்கியது, நேற்று பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளித்தது, இரத்த தான் முகாம் நடத்தியது என விஜய் ரசிகர்கள் நேற்றைய தினம் முழுவதும் அதகளப்படுத்தினர்.
இது ஒருபுறம் இருக்க நடிகர் விஜய்க்கு சினிமா முதல் அரசியல் பிரபலங்கள் வரை ஏராளமானோர் வாழ்த்து மழை பொழிந்தனர். ரசிகர்களும் தன் பங்கிற்கு விஜய்யை வாழ்த்தி புகைப்படங்கள், வீடியோ என சோசியல் மீடியாவை ஆக்கிரமித்தனர். இதனால் சமூக வலைதளங்கள் முழுவதும் நேற்றைய தினம் முழுவதும் விஜய் பற்றிய பதிவுகள் தான் நிரம்பி வழிந்தன. அவர்களை மகிழ்விக்கும் வகையில் அவர் நடித்துள்ள லியோ படக்குழு நேற்று அப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் பாடலை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.
இதையும் படியுங்கள்... ஒரே நாளில் ரிலீசாகும் கமல்ஹாசனின் 2 பிரம்மாண்ட படங்கள் - இதென்னப்பா புது டுவிஸ்டா இருக்கு!
இந்நிலையில், விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் ஜோடியாக நடித்திருந்த நடிகை பூஜா ஹெக்டே, விஜய்யின் பிறந்தநாளுக்கு சற்று தமாதமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜய் நேற்று பிறந்தநாள் கொண்டாடிய நிலையில், அவருக்கு இன்று வாழ்த்து தெரிவித்து பதிவிட்ட பூஜா ஹெக்டே, இதுவரை யாரும் பார்த்திடாத நடிகர் விஜய்யின் டான்ஸ் வீடியோ ஒன்றையும் சர்ப்ரைஸாக பதிவிட்டு இருந்தார்.
புட்ட பொம்மா பாடலுக்கு நடனமாடிய விஜய் pic.twitter.com/W3q2ZrJiHl
— Asianetnews Tamil (@AsianetNewsTM)அந்த வீடியோவில் நடன இயக்குனரும், நடிகருமான சதீஷ், நடிகை பூஜா ஹெக்டே மற்றும் இரண்டு குழந்தை நட்சத்திரங்களுடன் சேர்ந்து சென்சேஷனல் ஹிட்டான புட்ட பொம்மா பாடலுக்கு நடனமாடி இருந்தார் விஜய். இந்த வீடியோ பீஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்தது என பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் லேட்டா வாழ்த்து சொன்னாலும் லேட்டஸ்ட்டா சொல்லிருக்கீங்க என அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... தேவர்மகனை விமர்சித்தவருடன் மாமன்னன் படம் பார்த்து கமல் சொன்ன விமர்சனம்! கேட்டதும் நடுங்கிப்போன மாரி செல்வராஜ்