
தளபதியின் பிறந்தநாள்
தளபதி விஜய் கடந்த ஜூன் மாதம் 22ம் தேதி தனது 50வது பிறந்த நாளை கொண்டாடினார். ஆனால் இந்த முறை கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் உட்கொண்டு 50க்கும் அதிகமான மக்கள் இறந்த நிலையில், தனது பிறந்த நாளை பெரிய அளவில் கொண்டாட வேண்டாம் என்று அவர் தனது ரசிகர்களுக்கும், தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்களுக்கும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இருப்பினும் தமிழகம் முழுவதும் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு, பல நலத்திட்ட உதவிகளை அவரது ரசிகர்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர்களும் செய்து வந்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து அரசியல் தலைவர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், தனது ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து இன்று ஒரு பதிவினை வெளியிட்டார் விஜய்.
விஜயின் நன்றி பதிவு
அதில் புதுச்சேரி முதல்வர், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்கள் பன்னீர்செல்வம், எடப்பாடி மற்றும் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலருக்கும் தனது நன்றிகளை அவர் கூறியிருந்தார்.
இந்த சூழ்நிலையில் அவர் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கோ அல்லது அந்த கட்சியை சார்ந்த யாருக்கும் தனது நன்றிகளை தெரிவிக்கவில்லை. காரணம் முதல்வர் ஸ்டாலின் அவர்களோ, அல்லது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களோ தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.
கொளுத்திப்போட்ட ப்ளூ சட்டை மாறன்
இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், விஜய் அவர்களுக்கு திமுகவினர் வாழ்த்துக்களை தெரிவிக்காது ஏன் என்பது குறித்து நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஏன் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை? என்ற கேள்வியை முன் வைத்திருக்கிறார். இது சர்ச்சையை கிளப்பும் ஒரு பதிவாகவே மாறி இருக்கிறது.
நெட்டிசன்ஸ் ரியாக்ஷன் என்ன?
அவருடைய இந்த பதிவிற்கு பதில் அளித்துள்ள சில இணையவாசிகள், பல வருடங்களாக திரைத்துறையில் இருந்தும் தன்னால் கட்சியை ஆரம்பிக்க இயலவில்லை, ஆனால் தளபதி விஜய் சுலபமாக கட்சி ஆரம்பித்த காழ்ப்புணர்ச்சியின் காரணமாகத் தான் ரஜினிகாந்த் வாழ்த்துக்களை தெரிவிக்கவில்லை என்று சிலர் கூறியுள்ளனர்.
அதேபோல, கடந்த சில வருடங்களில் தளபதி விஜய் எப்போதாவது ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்லி இருக்கிறாரா? பிறகு ஏன் ரஜினி மட்டும் விஜய்க்கு வாழ்த்துக்களை சொல்ல வேண்டும் என்றும் சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.