
வருஷத்துக்கு 2 கமர்ஷியல் படம் ஹிட்டு கொடுத்தமா? ஆடியோ ரிலீஸ் பங்ஷன்ல குட்டி கதை சொன்னோமான்னு போய்க்கிட்டு இருந்தாரு தளபதி விஜய். நெய்வேலியில் "மாஸ்டர்" பட ஷூட்டிங்கில் இருந்தவரை வாண்டடா வண்டியில் ஏத்திய வருமான வரித்துறை, பண்ணை வீட்டில் வச்சி 24 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினாங்க.
இதையும் படிங்க: உலக நாயகனை முந்திக்கொண்டு ஆஸ்கர் விருதுக்கு துண்டு போடும் சீயான் விக்ரம்... வாய்பிளக்கும் திரையுலகினர்...!
அதுமட்டும் போதாதுன்னு, நீலாங்கரை, சாலிகிராமம், பனையூர்னு விஜய்க்கு சொந்தமான வீடுகளை வளைச்சி, வளைச்சி சோதனை செய்த ஐ.டி. ஆபிஸர்ஸ், கடைசியா ஒண்ணும் கிடைக்கலைன்னு வந்த வழியே ரிட்டன் ஆகிட்டாங்க. இதனால் ஹாப்பியான விஜய்ஃபேன்ஸ் டுவிட்டரில் சகட்டு மேனிக்கு ஹேஷ்டேக்குகளை போட்டு கொண்டாடினர். அப்பாடா...! இதோட விட்டாங்களே என்று தளபதியும் மாஸ்டர் ஷூட்டிங்கில் பங்கேற்றார்.
அமைதியாக ஷூட்டிங்கில் நடித்துக்கொண்டிருந்தவரை, 'உடனே வாங்கன்னு' சம்மன் அனுப்பி அழைத்தது வருமான வரித்துறை. இது விஜய்யை மட்டுமல்லாது, அவரது ரசிகர்களையும் கடுப்பாக்கியது. இதையடுத்து விஜய் கேட்டுக்கொண்டதன் பேரில் நாளை வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காதலர் விக்னேஷ் சிவனுக்காக பிரபல நடிகையிடம் தூது போன நயன்தாரா... கோலிவுட்டில் பரபரப்பு...!
விஜய் படங்களில் இடம் பெறும் டேரரான அரசியல் வசனங்களை பார்த்து, எங்க அரசியலுக்கு வந்திடுவாறோங்கிற காழ்ப்புணர்ச்சியில், எங்க அண்ணன் மேல ஐ.டி ரெய்டை விட்டாங்க என பொங்கியெழுத்தது ரசிகர்கள் பட்டாளம். உடனே 'எடுடா வண்டியா...!' என நெய்வேலியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஏ.ஆர்.முருகதாஸ் விஷயத்தில் பலித்த டி.ராஜேந்தர் சாபம்... தர்பாரால் வந்த வினை...!
அப்படி தானாக சேர்ந்த அந்த கூட்டத்துடன் வேன் மீது ஏறி நின்று செல்ஃபி எடுத்துக்கொண்ட விஜய், "நான் தனி ஆள் இல்லை, எனக்கு பின்னால் பெரிய கூட்டமே இருக்குன்னு" காட்டும் படி அதை டுவிட்டரில் ஷேர் செய்து நன்றி தெரிவித்தார். இதுவரை அந்த ட்வீட் 71 ஆயிரம் ரீ-ட்வீட்களை பெற்றதோடு, கிட்டத்தட்ட 2 லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது. இதன் மூலம் "மாஸ்டர்" படத்தின் போஸ்டர்கள் செய்த சாதனைகள் அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. சும்மா இருந்தவரை தூண்டிவிட்டு சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு மாற்றிவிட்டது ஐ.டி.ரெய்டு என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.