
விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான வாரிசு படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று உலகம் முழுவதும் வெளியானது. வம்சி இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். இவரது இசையில் வந்த ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்தது. அந்தளவிற்கு வாரிசு பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வாரிசு படம் வெளியாகும் முதல் நாளன்று இந்தப் படம் வெறும் 67 சதவிகித திரையரங்கு காட்சிகளை மட்டுமே பிடித்திருந்தது. காலை காட்சிகளில் 55.6 சதவிகிதம் பிடித்திருந்த வாரிசு படம், பிற்பகல் காட்சிக்கு 68.6 சதவிகிதம் வரையில் திரையரங்குகளை பிடித்து வசூலில் சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தில் ஓபனிங் கிங்: மீண்டும் ஒருமுறை நிரூபித்த அஜித் குமார்!
ஏற்கனவே முன்பதிவு டிக்கெட் மூலமாக 2ஆம் நாளுக்கு சென்னையில் மட்டும் ரூ.7 கோடி வரையில் வாரிசு படம் வசூல் குவித்துள்ளது. தற்போது சென்னையில் 98 சதவிகித திரையரங்குகளில் மாஸ் காட்டும் வாரிசு படம் பாண்டிச்சேரியில் முதல் நாள் முழுவதும் 100 சதவிகித திரையரங்குகளில் இந்தப் படம் திரையிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக விஜய் நடிப்பில் வந்த பீஸ்ட் படமும் இதே போன்று பாக்ஸ் ஆபிஸில் வசூல் அள்ளியது. எனினும், விமர்சன ரீதியாக போதுமான வரவேற்பு பெறவில்லை. ஆனால், வாரிசு படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்த நிலையில், வாரிசு படம் ஒட்டுமொத்தமாக ரூ.26.5 கோடி வரையில் வசூல் குவித்து வசூலில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது.தமிழகத்தில் மட்டும் 17 கோடி வரையில் வசூல் குவித்த வாரிசு, கர்நாடகாவில் ரூ.5 கோடியும், கேரளாவில் ரூ.3.5 கோடியும், மற்ற பிரதேசங்களில் ஒட்டுமொத்தமாக ரூ.1 கோடி வரையிலும் வசூல் குவித்து ஒட்டுமொத்தமாக ரூ.26 கோடி வரையில் வாரிசு படம் வசூல் அள்ளியுள்ளது என்று தொழில்துறை தரவு கண்காணிப்பாளர் சைனிக் தகவல் தெரிவித்திருக்கிறார். இதன் மூலமாக இன்றைய காலகட்டங்களில் ஆக்ஷன் காட்சிகளை விட செண்டிமெண்ட் காட்சிகளைத் தான் மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதுமட்டுமின்றி துணிவு படத்தில் அஜித் பேசும் வசனங்களுக்கு பீப் சவுண்ட் போடப்படுகிறது. இதையெல்லாம் குடும்பமாக சென்று பார்க்கும் வகையில் இருக்குமா? என்பது சந்தேகம் தான். அப்படியிருக்கும் போது முழுக்க முழுக்க குடும்பக் கதையை மையப்படுத்திய வாரிசு படம் துணிவு படத்தை விட உயர்ந்ததாக தெரிகிறது.
வசனமும், ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை சிலிர்க்க வைக்கிறது. குடும்பம் என்றாலே அதற்கு தனி மரியாதை தான் அல்லவா. அது வாரிசு படத்திற்கு கிடைத்துள்ளது. இதன் மூலமாக வசூலில் வாரிசு படம் நம்பர் 1 இடம் பிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பாக்ஸ் ஆபிஸில் தட்டித்தூக்கினாரா அஜித்?... துணிவு படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் இதோ
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.