
இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில், கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ஆர் ஆர் ஆர். சுதந்திரப் போராட்ட வீரர்களான, சீதாராமராஜு மற்றும் கோமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில், ஹீரோவாக நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடித்திருந்தனர்.
ஏற்கனவே பாகுபலி படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவை, உலக அளவில் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர் ராஜமௌலி, இயக்கத்தில் உருவானதால் இப்படத்தின் மீதான எதிர்பார்த்து அதிகரித்தது.
பான் இந்தியா திரைப்படமாக, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியான இந்த திரைப்படம், 550 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு சுமார் 1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. மேலும் இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
ஏற்கனவே இப்படத்தில் இசையமைப்பாளர் கீரவாணி இசையில், இப்படத்தில் இடம்பெற்றிருந்த 'நாட்டு கூத்து' பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருது பட்டியலில்... ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மற்றொரு சர்வதேச அளவிலான விருதுகளில் ஒன்றான கோல்டன் குளோப் விருதை பெற்றுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த கோல்டன் குளோப் விருது விழாவில், ஆர் ஆர் ஆர் படக்குழுவை சேர்ந்த அனைவருமே, கலந்து கொண்டனர்.
'வாரிசு' படத்திற்கு குவியும் நெகடிவ் கமெண்ட்ஸ்..! இயக்குனரின் இந்த கணக்கு சொதப்பிடுச்சோ?
இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் விதத்தில், சர்வதேச விருதான கோல்டன் குளோப் விருதை பெற்ற, கீரவாணிக்கு, திரையுலகை சேர்ந்த பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில், அனைவரது வாழ்த்துக்களையும் இசையமைப்பாளர் கீரவாணி மிகவும் உருக்கமாக "கோல்டன் குளோப் விருது பெற்றதற்கு அனைவரிடத்தில் இருந்தும் கிடைத்த வாழ்த்தால் வியப்படைந்தேன். உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.