தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் முன்பே, இதன் சாட்டிலைட் உரிமை மற்றும் டிஜிட்டல் உரிமையை பிரபல நிறுவனங்கள் கைப்பற்றியுள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
'விக்ரம்' படத்தின் மெகா ஹிட் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ்... இரண்டாவது முறையாக தளபதி விஜய்யை வைத்து, 'தளபதி 67' படத்தை இயக்க தயாராகியுள்ளார். மாஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள இந்த படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில் அவ்வப்போது இந்த படம் குறித்த சில தகவல்கள் வெளியாகி வருவதையும் பார்த்து வருகிறோம்.
லோகேஷ் கனகராஜ், தளபதி 67 படத்தை இயக்குவது குறித்த தகவல்... உறுதியானதுமே ரசிகர்கள் தொடர்ந்து லோகேஷ் கனகராஜியிடம் படம் பற்றிய கேள்விகளை எழுப்பி வந்ததால், சமூக வலைதளத்தை விட்டு திடீர் என விலகினார். விரைவில் மீண்டும் சமூக வலைதளத்தில் லோகேஷ் கனகராஜ் இணைவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது லோகேஷ் தளபதியை வைத்து இயக்க உள்ள 67வது படத்தின் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஆதிவாசி... மற்றும் ஏவாளாக மாறி காஜல் அகர்வால் எடுத்து கொண்ட போட்டோஸ் ஷூட்..! த்ரோ பேக் போட்டோஸ்..!
படத்தின் லொகேஷன், நடிகர் நடிகைகள், தொழில்நுற்ப கலைஞர்கள் பற்றிய தேர்வு பரபரப்பாக நடந்து வருகிறது. மேலும் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, விஜயின் 67 திரைப்படம் ஒரு கேங் ஸ்டார் படமாக எடுக்கப்பட உள்ளதாகவும். விஜய் மும்பையை சேர்ந்த தாதாவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதே போல், இந்த அப்படத்தில் தளபதிக்கு வில்லனாக பாலிவுட் நடிகர், சஞ்சய் தத் மற்றும் விஷால் ஆகியோர் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ள நிலையில், தற்போது இந்த படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் மற்றும் சேட்டலைட் ரைட்ஸ் விற்பனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தளபதி படத்தின் சேட்டலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றி உள்ளதாகவும், டிஜிட்டல் உரிமையை நெட்டபிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக அதிகார பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் மாதம் படம் குறித்த தகவல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தளபதியின் ரசிகர்கள் தாறுமாறாக வைரலாக்கி வருகிறார்கள். மிக பிரமாண்டமாக உருவாகும் தளபதி 67 படத்தில் நாயகியாக த்ரிஷாவும், சிறப்பு தோற்றத்தில் கமல்ஹாசனும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.