நான்கு வருடத்திற்கு பின் முடிவுக்கு வந்த ரோஜா சீரியல்! கடைசி நாளில் நாயகன் சிபு சூரியன் போட்ட எமோஷ்னல் பதிவு!

By manimegalai a  |  First Published Nov 28, 2022, 7:17 PM IST

சன் டிவியில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் 'ரோஜா' சீரியல் தற்போது ஒரு வழியாக இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. கடைசி நாள் ஷூட்டிங் குறித்து இந்த சீரியல் நாயகன் சிபு சூரியன் போட்ட பதிவு தற்போது ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
 


சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு, இல்லத்தரசிகள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது, அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று ரோஜா. இந்த சீரியலில்,  பிரியங்கா நல்கரி கதாநாயகியாக நடித்த வருகிறார். கதாநாயகனாக நடிகர் சிபு சூரியன் நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் வடிவுக்கரசி, காயத்ரி சேஷாத்திரி, ஸ்மிரிதி காஷ்யாப், வெங்கட் ரங்கநாதன், ராஜேஷ், டாக்டர் ஷர்மிளா, கவிதாலயா கிருஷ்ணன், வாசு, உள்ளிட்ட பல பிரபலங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

ஆதிவாசி... மற்றும் ஏவாளாக மாறி காஜல் அகர்வால் எடுத்து கொண்ட போட்டோஸ் ஷூட்..! த்ரோ பேக் போட்டோஸ்..!

 நான்கு வருடங்களாக ஒவ்வொரு வாரமும் டிஆர்பி ரேட்டில் மற்ற சீரியல்களுக்கு டஃப்  கொடுக்கும் விதமாக முதல் ஐந்து இடத்தை தன் வசப்படுத்திய இந்த சீரியல், சில ட்ரோல்களுக்கும் ஆளாகி உள்ளது. சிறு வயதில் தொலைத்து போன ரோஜா விதியின் வசமாக... தன்னுடைய மாமா மகனாக இருக்கும் அர்ஜுனை திருமணம் செய்து கொள்ள நேரிடுகிறது. திருமணத்திற்கு பின் ரோஜா தான், தன்னுடைய அத்தை மகள் என்று தெரிய வந்த வந்தாலும், ரோஜா அந்த குடும்பத்தின் வாரிசு இல்லை என கூறி... அணு என்கிற கதாபாத்திரம் உள்ளே நுழைந்து பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

மாஸ்டர் பிளானுடன் 'வாரிசு' ஆடியோ லாஞ்சுக்கு தயாராகும் தளபதி.! சைலண்டாக நடக்க போகிறதா எஸ்.ஏ.சியின் பஞ்சாயத்து?

அணு பற்றிய உண்மை தெரிய வந்த பின்னர், நாயகி ரோஜாவை குடும்ப வாரிசாக அனைவரும் ஏற்று கொள்ள, ரோஜா விபத்தால் நினைவுகளை இழந்த தன்னுடைய தாயையும் கண்டு பிடிக்க போராடுகிறார். எல்லோரும் ஒன்று சேர்ந்ததுமே இந்த சீரியல் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ட்விஸ்ட் வைக்கும் விதமாக ரோஜாவுக்கு தங்கை ஒருவர் உள்ளதாக காட்சிகள் காட்டப்பட்டது. தற்போது ரோஜாவுக்கு குழந்தையும் பிறந்துள்ளது... அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பு முலைகளுடன் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல், இறுதி கட்டத்தை எட்டியதை தொடர்ந்து, கடைசி நாள் படப்பிடிப்பு குறித்து மிகவும் உருக்கமாக சீரியலின் நாயகன் சிபு சூரியன் உருக்கமாக பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

நயன்தாராவின் கல்யாண சேலையை காப்பி அடித்து கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய ஸ்ரேயா..! செம்ம ஹாட்போட்டோஸ்..!

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது... "கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்த மிகவும் அழகான பயணம்... நூற்றுக்கணக்கான நினைவுகளுடனும், உங்களின் அளவு கடந்த அன்புடனும் சென்றது. படபிடிப்பின் கடைசி நாள் இன்று.  என்னை நம்பி அர்ஜுன் என்கிற கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்த சரிகமப தயாரிப்பு நிறுவனத்திற்கும் சன் தொலைக்காட்சிக்கும் என்னுடைய நன்றிகள். மேலும் என் மீது ரசிகர்கள் வைத்துள்ள அன்பிற்கும் கொடுத்த ஆதரவுக்கும் நான் என்றும் கடமை பட்டவன். விரைவில் உங்களை சந்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
 

click me!