நடிகர் தனுஷ் ஹைதராபாத் ஏர்போட்டில் நடந்து வரும் வீடியோ தற்போது அவருடைய ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்கள் நடிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, தனுஷ் தற்போது 'வாத்தி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிள் பாடலான வா வாத்தி பாடல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவும் உள்ளது.
இதை தொடர்ந்து தற்போது, தனுஷ் மிகவும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட, கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில்... அடுத்த படத்திற்காக ஆயத்தமாகியுள்ளார் தனுஷ். பிரபல இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் மூன்று மொழிகளில் நடிக்க உள்ள படத்தின் பூஜை இன்று ஹைதராபாத்தில் மிக பிரமாண்டமாக போடப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொள்வதற்காக தனுஷ், ஹைதராபாத் பறந்துள்ளார். ஹைதராபாத்தில் ஏர்போர்ட்டில் மிகவும் ஸ்டைலிஷாக... ஊடி அணிந்து தனுஷ் மாஸாக நடந்து செல்லும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. மேலும் தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்க உள்ள, இந்த படத்தில் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக உள்ள இந்த படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
காதல் கண்கட்டுதே...! கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் ஜோடியின் அழகிய திருமண புகைப்படங்கள் இதோ...
இயக்குனர் சேகர் கம்முலா, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’நீ எங்கே என் அன்பே’ உள்பட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷின் வைரல் வீடியோ இதோ...
.. at Hyderabad! pic.twitter.com/LB6ILiy8oi
— Chowdrey (@Chowdrey_)