தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ள கதாநாயகி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
விஜய்யின் 65 ஆவது படத்தை சன் பிச்சர் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இந்த படத்தை நயன்தாராவை வைத்து 'கோலமாவு கோகிலா', சிவகார்த்திகேயனை வைத்து 'டாக்டர்' ஆகிய படங்களை இயக்கியுள்ள நெல்சன் திலிப் குமார் இயக்க உள்ளதாகவும் ஏற்கனவே அதிகார பூர்வ தகவல் வெளியானது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிரூத் இசையமைக்க உள்ளார்.
இதனை அறிவிக்கும் விதமாக சன் பிச்சர் நிறுவனம் வீடியோ ஒன்றையும் வெளியிட்டது. அதில் கலாநிதிமாறனுடன், விஜய் பேசி கொண்டு வருவது போலவும், இதை அடுத்து நெல்சன் திலிப் குமார் பேசுவது போலவும். பின்னர் தோட்ட தெறிக்க... கார் பறக்கும்... அனிமேஷன் காட்சிகளும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ள நிலையில் , இயக்குனர் நெல்சன் திலீப் குமார், லொகேஷன் பார்ப்பதற்காக ரஷ்யா பிறந்துள்ளார். அங்கிருந்தப்படி அவ்வப்போது சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் தட்டி விட தளபதி ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
இந்த படத்தில், இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'முகமூடி' படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை பூஜா ஹேக்டே தளபதி 65 படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்த இதுவரை இது குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில் இன்று சரியாக 5 மணிக்கு, தளபதி 65 படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என, பிக் பிச்சர்ஸ் நிறுவனம் தெரிய்வத்திருந்த நிலையில்... தளபதிக்கு ஹீரோயினாக நடிக்க உள்ள நாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தளபதி விஜய்க்கு ஜோடியாக ஏற்கனவே வெளியான கிசுகிசுவை உறுதி செய்வது போல், பூஜா ஹேக்டே நடிப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
தற்போது வெளியாகியுள்ள வீடியோ இதோ...
The gorgeous onboard as the female lead of ! pic.twitter.com/flp4izppAk
— Sun Pictures (@sunpictures)