
சுல்தான் படத்தின் நிகழ்ச்சி தான் சினிமாவுக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளது போல உள்ளது என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் சுல்தான் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் கார்த்தி, இராஸ்மிகா மந்தனா, தயாரிப்பாளர் பிரபு மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
பிறகு மேடையில் பேசிய கார்த்தி; ரொம்ப நாள் கழித்து நெருங்கிய சொந்ததின் கல்யாணத்திற்கு போனது போல உள்ளது. தேவைகள் ரொம்ப கம்மியா இருந்தால் போதும் என இந்த கொரோனா நமக்கு சொல்லி கொடுத்துவிட்டது. மத பேதம் இல்லாமல் அனைவரையும் ஒன்று சேர்ப்பது சினிமா. இந்த படத்தின் கதை சிறப்பாக இருந்ததால் தான் இதை தேர்வு செய்தேன். ஒரு நல்ல ஆக்சன் படத்திற்கு நல்ல வில்லன் தேவைப்படுகிறார்.
யோகி பாபுவை அமீர் அலுவகத்தின் வாசலில் தான் நான் முதலில் பார்த்தேன். பிறகு சில படங்களில் பார்த்தேன். நன்றாக நடித்துள்ளார். அவரின் காமெடிகளை பார்த்து நல்லா சிரிப்பேன். ஆளை பார்த்து யாரையும் எடை போட கூடாது என நான் யோகிபாபுவை பார்த்து தான் தெரிந்து கொண்டேன். இந்த நிகழ்ச்சி தான் சினிமாவுக்கு உயிர் கொடுத்துள்ளது போல உள்ளது என்றார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.