நடிகர் அமீர் கானுக்கு கொரோனா..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Published : Mar 24, 2021, 01:36 PM IST
நடிகர் அமீர் கானுக்கு கொரோனா..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

சுருக்கம்

பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் மும்பையில் தன்னுடைய வீட்டில் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ள தகவல் வெளியாகி அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  

பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் மும்பையில் தன்னுடைய வீட்டில் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ள தகவல் வெளியாகி அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கொரோனா தொற்று சற்று ஓய்ந்ததை நினைத்து இந்திய மக்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில், ஆனால் தற்போது மீண்டும் கொரோனா அதிக அளவில் பரவ துவங்கியுள்ளது. சமீபத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அவரது அம்மா தெரிவித்தார். அதே போல் நடிகர் சூர்யா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் தான் அதில் இருந்து குணமடைந்த நிலையில், இவர்களை தொடர்ந்து தற்போது மற்றொரு முன்னணி பாலிவுட் ஸ்டார் நடிகர் அமீர் கான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவரது, செய்தி தொடர்பாளர் அமீர் கானுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை உறுதி செய்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள தகவலில், நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அந்த விதத்தில், நடிகர் அமீர் கானுக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது அவருக்கு பாசிட்டிவ் என வந்துள்ளது. இதை தொடர்ந்து, அவர் வீட்டிலேயே தன்னை தானே தனிமை படுத்திகொண்டு, மருத்துவர்களின் ஆலோசனைப்படி உரிய மருந்துகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவரது உடல்நிலை நலமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாலிவுட் முன்னணி நடிகரான, அமீர் கான் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அறிந்த அவரது ரசிகர்கள், விரைவில் அவர் உடல் நலம் தேறி வரவேண்டும் என பிராத்தனை செய்து வருகிறார்கள். அதே போல் மற்ற பிரபலங்கள் சிலரும், அவர் முழுமையாக கொரோனா தொற்றில் இருந்து குணமடைய வேண்டும் என, வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

மீண்டும் பரவ துவங்கியுள்ள கொரோனாவை கட்டு படுத்த, மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். 45 வயதை கடந்த அனைவரும், கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வது கட்டாயம் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'த்ரிஷ்யம் 3' படம் எப்போ ரிலீஸ்? மோகன்லால் வெளியிட்ட அடிபொலி அப்டேட்
ஒரே கதையை காப்பியடிச்சு எடுக்கப்பட்ட 3 படங்கள்... மூன்றிலுமே நயன்தாரா தான் ஹீரோயின் - மூணுமே செம ஹிட்..!