"தமிழ் ஸ்டாக்கர்ஸ்" என்ற திரில்லருடன் OTT தளத்தில் கால் பாதிக்கும் ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம்..!

By manimegalai aFirst Published Mar 24, 2021, 4:53 PM IST
Highlights

75 ஆண்டுகளுக்குமேலாக தரமான கதையம்சம் உள்ள படங்கள் மூலம் , திரையுலகில் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த, ஏவிஎம் புரொடகஷ்ன்ஸ் நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பை தற்போது அறிவித்துள்ளது. புத்தம் புதிய, புதிரான, திரில்லர் கதைக்களம் கொண்ட "தமிழ் ஸ்டாக்கர்ஸ்" என்ற வெப் தொடரை தயாரிக்க உள்ளது. இதை, ஈரம் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய, அறிவழகன் இயக்க உள்ளார். 
 
தமிழ் திரைப்பட உலகில் சமீப காலமாக நடக்கும் திரைப்பட திருட்டு கும்பலை மையமாகக் கொண்டு அதன் யதார்த்தங்களை சுவைபடச் சொல்லும் "தமிழ் ஸ்டாக்கர்ஸ்" என்ற தொடரின் மூலம் தன் OTT பயணத்தை சோனி லிவ்-ல் தொடங்குகிறது என்பதை அறிவித்துள்ளது. 

ஒரு படைப்பை சட்டவிரோதமாகவும், அங்கீகாரம் இல்லாமலும் நகல் எடுப்பது பெரும் குற்றம் மட்டுமின்றி, படைப்புத்திருட்டு என்பது, உலகெங்கும் உள்ள படைப்பாளர்களின் பெரும் கவலைகளில் ஒன்றாகும். இந்தியாவில், தமிழ் திரையுலகம், பல்வேறு ஆன்லைன் திருட்டு வலைத்தளங்களின் காரணமாக இந்த பிரச்சினையுடன் முடிவில்லாத போரை நடத்தி வருகிறது. இந்தக் கதை அந்த திருட்டு உலகின் இருண்ட பக்கத்தை ஆழமாக சென்று காட்டுகிறது. மேலும் திருட்டு உள்ளடக்கத்தை வெளியிடுவதில் ஈடுபட்டுள்ள குழுவை அடையாளம் காட்டுவதற்கு திரைத்துறையின் தொடர்ச்சியான போரை பற்றியும் சொல்கிறது.

இந்த வெப் தொடர் பொழுது போக்குகாக மட்டும் இன்றி அர்த்தமுள்ளதாகவும் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளிவர இருக்கிறது.

"தமிழ் ஸ்டாக்கர்ஸ்"ல் வெப் தொடர் திருட்டுக்கு எதிரான, தமிழ் திரைத்துறையின் இடைவிடாத போரின் கேள்விப்படாத அம்சங்களையும், அதை எதிர்கொள்வதற்கான வழிகள் பற்றி சொல்லியிருக்கிறோம். SONY LIV உடன் இணைந்து பார்வையாளர்களிடம் இதைக் கொண்டு சேர்ப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி. அறிவழகன் போன்ற தொலைநோக்கு பார்வை கொண்ட இயக்குனருடன், இணைந்து வெற்றியை உறுதி செய்யும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

click me!