சொகுசு படகில் குடும்பத்துடன் அஜித்.. "தல" என்று கத்திய ரசிகர்களுக்கு கை அசைத்து வாழ்த்து - வைரலாகும் வீடியோ!

By Ansgar RFirst Published Jan 2, 2024, 11:58 PM IST
Highlights

Actor Ajith in Dubai : நடிகர் அஜித் தனது விடாமுயற்சி படத்திற்கான பணிகளை அஜர்பைஜான் நாட்டில் முடித்துவிட்டு இப்பொது துபாயில் அடுத்தகட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.

சரியாக ஓராண்டுக்கு முன்பு கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி தல அஜித் அவர்களுடைய துணிவு திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் வினோத் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் இந்த படத்தை தயாரித்து வழங்கியிருந்தார். அப்பட பணிகளை முடித்த தல அஜித் அவர்கள் தனது பைக் டூரிங் கம்பெனியின் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தார். 

அதன் பிறகு பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் தல அஜித் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவுடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக அந்த திரைப்படம் விக்னேஷ் சிவன் கையில் இருந்து நழுவி பிரபல இயக்குனர் மகிழ் திருமேனியிடம் சென்றது. மேலும் அந்த படத்திற்கு விடாமுயற்சி என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. 

Latest Videos

'பிச்சைக்காரன்' பட ஹீரோயின்... சட்னா டைட்டசுக்கு இவ்வளவு பெரிய மகனா? வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

ஆனால் சுமார் 8 மாத காலமாக எந்த விதமான அப்டேட்டுகளும் இல்லாமல் விடாமுயற்சி திரைப்படம் கிடப்பில் கிடந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் அந்த பட படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக துவங்கியது. அஜர்பைஜான் என்ற நாட்டில் தல அஜித் அவர்களும் இந்த படத்தில் அவருடைய நாயகியாக நடிக்கும் திரிஷா அவர்களும் படப்பிடிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர். 

தொடர்ச்சியாக அஜர்பைஜான் நாட்டில் விடாமுயற்சி படபிடிப்பு நடந்து வந்த நிலையில் தற்போது துபாயில் அப்படத்திற்கான பணிகள் நடந்து வருகிறது. அண்மையில் தல அஜித் அவர்கள் பணி நிமித்தமாக அடிக்கடி துபாய் சென்று வருவதால் அங்கு ஒரு சொகுசு பங்களா வாங்கியுள்ளதாக சில தகவல்கள் வெளியானது. இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தின் படபிடிப்பிலிருந்து கிடைத்துள்ள ஓய்வு நேரத்தில் தனது குடும்பத்தாருடன் அவர் நேரத்தை செலவிட்டு வருகிறார். 

spending time with his family at Dubai💫
The way he waved hands when fans started calling him THALA🤩♥️ pic.twitter.com/YPVjCRA5c0

— AmuthaBharathi (@CinemaWithAB)

இந்நிலையில் இப்பொழுது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் துபாய் நாட்டு கடற்கரையில் ஒரு சொகுசு படகில் தனது குடும்பத்தாருடன் அவர் பயணம் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அப்பொழுது அருகில் உள்ள படகில் இருந்த சில தல அஜித் அவர்களின் ரசிகர்கள், அவரை நோக்கி தல என்று கோஷமிட, தன் கைகளை உயர்த்தி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து சென்றிருக்கிறார் தல அஜித். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

மூன்று லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்.. மீண்டும் பொதுநல பணியில் பாலா - புகழாரம் சூட்டும் மக்கள்

click me!