Actress Michelle Yeoh : தமிழ் மொழி ரசிகர்கள், பல மொழி நடிகர்,நடிகைகளையும் ரசிக்கும் குணம் கொண்டவர்கள். அந்த வகையில் டப்பிங் படங்கள் மூலம் மட்டுமே தமிழ் ரசிகர்கள் அறிமுகமாகியிருந்தாலும், பிரபல நடிகை Michelleலை பலருக்கும் பிடிக்கும்.
மலேசியாவில் பிறந்து சீன மொழியில் நடிகையாக கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருபவர் தான் Michelle Yeoh. இவர் நடிகையாக மட்டுமல்லாமல் கடந்த சில ஆண்டுகளாக டப்பிங் கலைஞராகவும் திகழ்ந்து வருகிறார். சுமார் 2029 ஆம் ஆண்டு வரை இவருடைய திரைப்படங்களின் பட்டியல் நீள்கிறது என்ற ஒரு தகவல் அண்மையில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
அதிலும் குறிப்பாக 2025 ஆம் ஆண்டு வெளியாக உள்ள "அவதார்" திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடிக்க உள்ளார். தொலைக்காட்சிகளிலும் பல நாடகங்களில் நடித்து வரும் Michelle Yeoh. தன்னுடைய உடலில் இருக்கும் குறைபாடு குறித்து பொதுவெளியில் அவ்வப்போது தைரியமாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
யோவ் ஒன்றுக்கு மேற்பட்ட முறை கருத்தரிப்பதில் உள்ள தனது சிரமங்களைப் பற்றி பகிரங்கமாகப் பேசியுள்ளார், சோதனைக் கருத்தரித்தல் (IVF) உட்பட பல்வேறு முறைகளை முயற்சித்தாலும் தன்னால் குழந்தைகளைப் பெற முடியவில்லை என்று பகிர்ந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் தான் நிக்கோலஸ் என்கின்ற பையனை அவர் தத்தெடுத்தார்.
Michelle Yeohவின் கணவரின் முந்தைய திருமணத்தில் பிறந்த குழந்தையும் அவர்கள் வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் நேற்று ஜனவரி 1ம் தேதி Michelle Yeoh தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டிருந்தார். அதில் ஒரு குழந்தையோடு அவர் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இந்த புத்தாண்டில் எங்களுக்கு ஒரு மிகப்பெரிய அற்புதம் கிடைத்திருக்கிறது என்று அவர் கூறியிருந்தார்.
இது அவருடைய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது. அது யாருடைய குழந்தை என்று பலரும் சந்தேகங்களை எழுப்பி வந்தனர். இந்த சூழலில் அவர் அந்த பதிவினை வெளியிட்ட சில மணி நேரங்களில் அவருடைய வளர்ப்பு மகன் நிக்கோலசும் அதே குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு அந்த குழந்தை தன்னுடைய குழந்தை என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து அந்த குழந்தை Michelle Yeohவின் பேரக்குழந்தை என்று தெரியவந்துள்ளது. இப்பொது அவருடைய ரசிகர்கள் பலரும் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.