செம்ம கடுப்பில் சிரஞ்சீவி... சக நடிகர்களுடன் சேர்ந்து அடம்பிடிக்கும் மகனால் அப்செட்டில் தந்தை...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jun 24, 2020, 05:25 PM IST
செம்ம கடுப்பில் சிரஞ்சீவி... சக நடிகர்களுடன் சேர்ந்து அடம்பிடிக்கும் மகனால் அப்செட்டில் தந்தை...!

சுருக்கம்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான மகேஷ்பாபு, பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர். ராம்சரண், அல்லு அர்ஜூன் உள்ளிட்டோர் ஆகஸ்ட் மாதம் முடியும் வரை படப்பிடிப்பில் பங்கேற்க மாட்டோம் என ஸ்ட்ரிக்ட் உத்தரவு போட்டுவிட்டார்களாம்.

கொரோனா பிரச்சனை காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலே முடங்கி கிடந்த சினிமா உலகம் தற்போது தான் கொஞ்சம் புத்துணர்வு பெற ஆரம்பித்துள்ளது. இறுதி கட்டத்தில் இருக்கும் பட வேலைகளை முடிக்க ஏதுவாக போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளை முடிக்க ஏதுவாக போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளுக்கும்,  ஊரடங்கால்  வேலை இழந்து வாடும் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் சீரியல் படப்பிடிப்புகளையும் நடத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

 

இதையும் படிங்க: தள்ளாத வயதில் தலைக்கேறிய காமம்... 67 வயது ஆபாச பட நடிகருக்கு 90 ஆண்டுகள் ஜெயில்...!

தமிழகத்தில் இதுவரை சினிமா படப்பிடிப்பிற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில்,தெலங்கானாவில் படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறைவான ஆட்கள் மற்றும் முறையான தடுப்பு நடவடிக்கைகளுடன் படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்திருந்தார். இதையடுத்து  நடிகர் சிரஞ்சீவி தலைமையிலான தெலுங்கு திரையுல பிரமுகர்கள், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்தனர். சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில், நடிகர் நாகார்ஜுனா, இயக்குநர் ராஜமவுலி, தயாரிப்பாளர்கள் சி.கல்யாண், தில்ராஜு ஆகியோர் பங்கேற்றனர். 

தெலுங்கு சினிமாவின் பரிதாப நிலையை எடுத்துரைத்து கெஞ்சி கூத்தாடி, படப்பிடிப்பிற்கு அனுமதி கேட்டனர். மெகா ஸ்டார் உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியும் ஜூலை 15ம் தேதி முதல் படப்பிடிகளை நடத்திக்கொள்ள அனுமதி அளித்தார். மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பிக்க உள்ள சந்தோஷத்தில் குஷியாக இருந்த தெலுங்கு தயாரிப்பாளர்கள் தலையில் டோலிவுட் நடிகர், நடிகைகள் கல்லைத் தூக்கி போட்டுள்ளனர். 

 

இதையும் படிங்க: கொழு கொழுன்னு இருந்த வித்யுலேகா ராமனா இது?... 30 கிலோ வரை எடையை அசால்டாக குறைத்து ஆளே மாறிட்டாரே....!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான மகேஷ்பாபு, பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர். ராம்சரண், அல்லு அர்ஜூன் உள்ளிட்டோர் ஆகஸ்ட் மாதம் முடியும் வரை படப்பிடிப்பில் பங்கேற்க மாட்டோம் என ஸ்ட்ரிக்ட் உத்தரவு போட்டுவிட்டார்களாம். இதனால் இரு மாநில முதலமைச்சர்களையும் சந்தித்து பர்மிஷன் வாங்கி கொடுத்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி செம்ம கடுப்பில் உள்ளாராம். இதில் முதலில் இருப்பது அவருடைய மகன் ராம்சரண் என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறாராம். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!