“முருங்கைக்காய் சமாச்சாரம் உண்மையா?”... மகன் சாந்தனுவின் டவுட்டை கிளீயர் செய்த அப்பா பாக்யராஜ்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 24, 2020, 4:12 PM IST
Highlights

ஆனா பாரு... இத்தனை வருஷமானாலும் சொல்றதுக்கு எனக்கு சங்கோஜமா, வெட்கமா இருக்கு. நீதான் வெட்கமே இல்லாம கேட்டுக்கிட்டே இருக்குறே’’ என்று கேலியும் கிண்டலுமாக சொல்லி முடித்தார் கே.பாக்யராஜ். 
 

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் கே.பாக்யராஜுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. அவருடைய கதை, திரைக்கதை பாணியை யாராலும் அவ்வளவு எளிதியில் கையாள முடியாத. அப்படிப்பட்ட கே.பாக்யராஜ் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. 1983ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில், ஊர்வசி கோவை சரளா, தீபா, ‘பசி’சத்யா, நளினிகாந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். ஏவிஎம் ஸ்டுடியோ தயாரித்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். 

36 வருடங்களுக்குப் பிறகு இந்த படம் ரீமேக் செய்யப்பட உள்ளது. கே.பாக்யராஜ் இயக்க, சசிகுமார் ஹீரோவாக இதில் நடிக்கிறார். இதனை ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்து முறைப்படி அனுமதி பெற்று  ஜேஎஸ்பி சதீஷ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஹீரோயின் உள்ளிட்ட மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேர்வுசெய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் இந்த படத்தின் ஸ்பெஷல் விஷயமான முருங்கைகாய் மேட்டர் குறித்து கே.பாக்யராஜிடம் அவருடைய மகன் கேள்வி எழுப்பியுள்ளார். 

 

இதையும் படிங்க: மனைவி சங்கீதாவுடன், தளபதி விஜய்... கலக்கல் ஜோடியின் அரிய புகைப்பட தொகுப்பு...!

’டேட் சன் கிரியேஷன்ஸ் என்ற பெயரில் நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜை, அவரின் மகன் சாந்தனு பேட்டி எடுத்தார்.அதில் ரசிகர்கள் கேட்டிருந்த நிறைய கேள்விக்கு கே.பாக்யராஜ் பதிலளித்து வந்தார். அப்போது, “முருங்கைக் காய் சீன். இந்தக் காட்சியை எடுக்கும்போதே, இந்த அளவுக்கு ரீச் ஆகும்னு எதிர்பார்த்தீங்களா? எனக்கும் ஒரு டவுட்டு. உண்மையிலேயே, முருங்கைக்காய்ல அப்படியொரு சக்தி இருக்கா, இல்லியா?’ இல்ல... நீங்களே சும்மா அடிச்சு விட்டீங்களா?’’ என கேள்வி எழுப்பினார். 

‘’இல்லப்பா... அதுமாதிரிலாம் அடிச்சுவிடமுடியாது. கடவுள் மேல சத்தியமா சொல்றேன். முருங்கைக்காய் சமாச்சாரம் உண்மைதான். என்னோட அம்மாவோட அம்மா, என் பாட்டி வீட்ல எல்லாருக்கும் சாப்பாடு போடுவாங்க. எங்க மாமாலாம் சாப்பிட உக்கார்ந்திருப்பாங்க. அப்போ, மட்டனோ சிக்கனோ பண்ணிருந்தா, ‘இன்னும் ஒரு பீஸ் போட்டுக்கோ, இன்னொரு பீஸ் போட்டுக்கோன்னு’ போடுவாங்க எனக்கு. ஆனா முருங்கைக்காய் குழம்பு வைச்சிருக்கும் போது, நாமளே கேட்டோம்னாக் கூட, ‘சாறுடா’ன்னு சாம்பாரைத்தான் ஊத்துவாங்களே தவிர, முருங்கைக்காயை போடமாட்டாங்க.

 

இதையும் படிங்க:  தள்ளாத வயதில் தலைக்கேறிய காமம்... 67 வயது ஆபாச பட நடிகருக்கு 90 ஆண்டுகள் ஜெயில்...!

எங்க மாமாவுக்கெல்லாம் போடுவாங்க. எனக்கு போடமாட்டாங்க. ’முந்தானை முடிச்சு’ல பரிமளா எப்படி சின்னச்சின்ன பசங்களோட சேர்ந்து சுத்திட்டிருந்தா. அதுமாதிரி எங்க ஊர்ல பெரியமனுஷன் ஒருத்தர் சின்னப் பசங்க எங்களோட சுத்திட்டிருந்தாரு. அவர், எப்பவுமே சின்னப்பசங்க கூட சுத்துவாரு. அவர்கிட்ட, ‘அண்ணே அண்ணே ஒரு டவுட்டுண்ணே’ன்னு கேப்போம். ’ஏன் முருங்கைக்காயை மட்டும் போடமாட்டேங்கிறாங்க. மட்டன், சிக்கன்லாம் போடுறாங்களே ஏன்’னு கேட்டோம். ‘அது கொஞ்சம் டிரபிள் பண்ணும்டா. என்ன டிரபிள் பண்ணும் எங்க மாமா எல்லாம் சாப்பிடுறாங்களே அவங்களுக்கு பிரச்சனை இல்லையா? என கேட்டேன். டேய்! அவங்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகிடுச்சிடா... டிரபிள் பண்ணா கூட பிரச்சனை இல்ல.  உங்களுக்குப் பிரச்சினைடா’ன்னு சொன்னார்.

 

இதையும் படிங்க:  கொழு கொழுன்னு இருந்த வித்யுலேகா ராமனா இது?... 30 கிலோ வரை எடையை அசால்டாக குறைத்து ஆளே மாறிட்டாரே....!

’புரிஞ்சுக்கடா... சும்மா இதைப்போய் நொய்நொய்னு கேட்டுக்கிட்டே இருக்கே’ன்னு சொன்னார். இதைத்தான் பின்னாடி, ‘முந்தானை முடிச்சு’ல வைச்சேன் என பாக்யராஜ் விளக்கம் கொடுக்க, உடனே சாந்தனு எல்லாரும் தெரிஞ்சிக்கோங்க,  முருங்கைக்காய்க்கு பின்னால இருக்குற சயின்ஸ் உண்மை தான் என சிரித்து கொண்டே கூறினார். 

ஆனா பாரு... இத்தனை வருஷமானாலும் சொல்றதுக்கு எனக்கு சங்கோஜமா, வெட்கமா இருக்கு. நீதான் வெட்கமே இல்லாம கேட்டுக்கிட்டே இருக்குறே’’ என்று கேலியும் கிண்டலுமாக சொல்லி முடித்தார் கே.பாக்யராஜ். 
 

click me!