
சமீபத்தில் சிம்புவை திருமணம் செய்யப் போவதாக கூறி சர்ச்சையை கிளப்பினார் சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி. அதோடு மறைந்த நடிகை சித்ரா மற்றும் யாரடி நீ மோகினி நடிகை நட்சத்திர குறித்து அவ்வப்போது சர்ச்சையான பதிவுகளையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். இவர் முன்னர் கடந்த 18ஆம் தேதி நட்சத்திராவுக்கு நிச்சயதார்த்தம் நடந்த போது பரப்பான வீடியோவை வெளியிட்டு கவனத்தை ஈர்த்தார். அதாவது அதுவும் தான் அறிமுகப்படுத்திய நபரோடும் நட்சத்திராவுக்கு கல்யாண நிச்சயா தார்த்தம் நடந்துள்ளதாகவும், ஆனால் தனக்கு எந்த அழைப்பும் விடுக்கவில்லை இது குறித்து தான் தட்டி கேட்டதற்கு நட்சத்திரம் அம்மா என்னை அடிக்க வந்தார்.
மேலும் செய்திகளுக்கு..மனைவியாக வாழ்ந்தால் மாதம் 25 லட்சம் சம்பளம் : மனம் நொந்த விஷால் பட நடிகை !
நட்சத்திராவுக்கு அநியாயம் நடக்குது என்னால் காப்பாற்ற முடியவில்லை. பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவின் நிலை நட்சத்திராவிற்கு ஏற்படும் என பயமாக இருக்கிறது என கூறினார். இவரது பதிவு அப்போது பேசும் பொருளானது. பின்னர் ஸ்ரீநதியின் தாய் இது குறித்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த போது, ஸ்ரீநிதி செய்தது மிகப்பெரிய தவறு நட்சத்திர விஷயத்தில் அவர் சொல்வது எல்லாமே சரிதான். ஆனால் தன்னுடனே இருந்த நட்சத்திர பிரிவது குறித்து அவளால் தாங்க முடியவில்லை. அதனால் இப்படி பேசிவிட்டால். ஸ்ரீநிதி வெளியிட்ட வீடியோவை டெலிட் செய்து விட்டதாகவும் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு..முன்பு முதல்வர்..தற்போது பிரதமர்...இந்திரா காந்தியாக எமர்ஜென்சியில் கலக்கும் கங்கனா..டீசர் உள்ளே!
அதோடு சிம்பு குறித்து தான் எதையும் பேச விரும்பவில்லை. சிம்புக்கு நிறையபேர் ரசிகைகளாக இருப்பதைப் போல் தன் மகளும் ரசிகைதான் எனக் குறிப்பிட்டவர். நட்சத்திரா நல்ல பொண்ணு அந்தப் பையன் நல்ல பையன் என குறிப்பிட்டார்.
சிறிது காலம் அமைதியாக இருந்த ஸ்ரீநிதி தற்போது நட்சத்திராவின் திருமணத்திற்கு பிறகு மீண்டும் இன்ஸ்டால் தானும் நட்சத்திராவும் இருக்கும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். முன்னதாக அவரது திருமணம் குறித்து பதிவிட்ட ஸ்ரீநிதி உடனடியாக அந்த வீடியோவை டெலிட் செய்து விட்டார். தற்போது இருவரும் இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களை மட்டும் பகிர்ந்து வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு..அனைவரும் ஏன் 'கார்கி' படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும்? விமர்சனம் இதோ..!
கிடா பூசாரி மகுடி என்னும் படத்தின் மூலம் தமிழ் திரையுலருக்கு அறிமுகமான கேரளாவை சேர்ந்த நட்சத்திரா சில படங்களில் நடித்துள்ளார். அதோடு ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி நாடகத்தில் வெண்ணிலாவாக வந்து ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்தார். முன்னதாக கலர்ஸ் தமிழில் வள்ளி திருமணம் நடத்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.