
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரானவத் தற்போது நடித்துள்ள "எமர்ஜென்சி" என்னும் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அந்த படத்தில் பிரதமர் இந்திரா காந்தி போலவே இவர் நடித்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள இந்த டீசரில். கங்கனா ரானவத் மறைந்த பிரதமரின் தோற்றம், கண்கண்ணாடி மற்றும் காட்டன் சேலையுடன் மாஸ் லுக்கில் உள்ளார்.
இந்த படம் இந்திய ஜனநாயகத்தின் இருண்ட நேரம் என்று அழைக்கப்படும் சகாப்தத்தை எடுத்துச் சொல்லும் படைப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த படம் இந்திரா காந்தியின் வரலாறு அல்ல என்று சமீபத்தில் வேதனையுடன் கூறி இருந்தார் கங்கனா ரானவத்.
மேலும் செய்திகளுக்கு..அனைவரும் ஏன் 'கார்கி' படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும்? விமர்சனம் இதோ..!
அதோடு இந்த டீசர்ட் வீடியோவில் முன்னாள் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சரிடம் இருந்து அழைப்பு வருகிறது. அந்த அழைப்பு குறித்து இந்திரா காந்தியின் உதவியாளர் வந்து தெரிவிக்கிறார். சரி என கூறும் பிரதமர், தன்னை அலுவலகத்தில் அனைவரும் சார் என்று அழைப்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதியிடம் தெரிவிக்கும்படி கூறுகிறார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. முன்னதாக அவர் ஏ.எல் விஜயன் தலைவி படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போல நடித்திருந்து. இதில் இளமை காலம் முதல் முதல்வர் ஆனாவரை ஜெயலலிதாவாக நடித்திருந்தார்.
இந்நிலைகள் தற்போது மறைந்த பெண் பிரதமர் போல அவர் தோன்றி இருப்பது மிகுந்த க எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அரசியல் களம் குறித்த முனைப்பான விமர்சனங்களை எடுத்து வைத்து வரும் கங்கனா தற்போது காங்கிரஸ் முன்னணி தலைவரும், முன்னாள் இந்திய பிரதமரும், அவர் ஆட்சியின் போது மிகவும் சிக்கலான ஒரு முடிவை எடுத்தவறுமான இந்திரா காந்தி தோற்றத்தில் நடித்திருப்பது அனைவரின் கவனத்தையும் குவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு..Mirnalini Ravi | மிர்ணாளினி ரவி லேட்டஸ்ட் புகைப்படம்! கொள்ளைகொள்ளும் கொஞ்சும் அழகு!
படத்தைப் பற்றி பேசிய கங்கனா ரனாவத் இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கிய காலகட்டத்தை எமர்ஜென்சி பிரதிபலிக்கிறது. அதனால் தான் இந்த கதையை சொல்ல முடிவு செய்தேன். திரையில் எப்போதும் ஒரு பிரபல நபராக நடிப்பது சவாலான ஒன்று. ஏனெனில் ஒருவரின் தோற்றம் குணாதிசயங்கள் மற்றும் ஆளுமையை சரியாக பெறவேண்டும். நான் இந்த விஷயத்தில் ஆராய்ச்சி செய்வதில் அதிகநேரத்தை செலவிட்டு உள்ளேன். என்னிடம் போதுமான பயிற்சி இருந்தது என்பதை உணர்ந்த பிறகு படப்பிடிப்பை தொடங்கினேன் எனக் கூறியிருந்தார்.
மேலும் செய்திகளுக்கு..மனைவியாக வாந்தால் மாதம் 25 லட்சம் சம்பளம் : மனம் நொந்த விஷால் பட நடிகை !
அதோடு கங்கனா 1975 ம் வருட நாளிதழில் இருந்து ஒரு கிளிப்பை பகிர்ந்து கொண்டு இது உலகின் மிக சமீபத்தில் வரலாற்று மிகவும் உயர்ந்த நிகழ்வு இன்று அறிவிக்கப்பட்ட எமர்ஜென்சிக்கு என்ன வழி வகுத்தது மற்றும் அதன் விளைவுகள் என்ன? அதன் மையத்தில் உலகில் மிகவும் சக்தி வாய்ந்த பெண்மணி இருந்தார். இது ஒரு பெரிய அளவிலான காவிய திரைப்படம் என குறிப்பிட்டு இருந்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.