Breaking: ஜப்பான் - ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுத்த தமிழக அரசு!

By manimegalai a  |  First Published Nov 8, 2023, 8:11 PM IST

தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ள, கார்த்தியின் 'ஜப்பான்' மற்றும் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
 


இந்த ஆண்டு தீபாவளிக்கு தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக உள்ள ரஜினி, கமல், விஜய், அஜித், போன்ற நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், கார்த்தி ஹீரோவாக நடித்துள்ள 'ஜப்பான்' மற்றும் ராகவா லாரன்ஸ் - எஸ் ஜே சூர்யா முதல் முறையாக இணைந்து நடித்துள்ள 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மற்றும் விக்ரம் பிரபு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள 'ரெய்டு' ஆகிய படங்கள்' நவம்பர் 10-ஆம் தேதி வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து  காளி வெங்கட் கதையின் நாயகனாக நடித்துள்ள 'கிடா' திரைப்படம் நவம்பர் 11-ஆம் தேதி வெளியாகிறது.

Tap to resize

Latest Videos

இந்த நான்கு படங்களுமே, வெவ்வேறு கதைக்களத்தில் வெரைட்டியான படங்களாக, இந்த தீபாவளிக்கு வெளியாக உள்ளதால் ரசிகர்களும் இப்படங்களை பார்க்க ஆர்வமாக காத்திருக்கின்றனர். அதேபோல் தளபதியின் 'லியோ' படமும் இந்த ஆண்டு தீபாவளிக்கு பல திரையரங்குகளில் ஓடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தீபாவளிக்கு ரிலீசாக உள்ள படங்களின் முன்பதிவு துவங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில், நாளை மறுநாள் வெளியாக உள்ள 'ஜப்பான்' மற்றும் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படத்திற்கு தமிழக அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த இரண்டு படங்களுக்குமே, படம் வெளியாகும் நவம்பர் 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை, காலை 9 மணி முதல் நள்ளிரவு 1:30  மணி வரை ஐந்து காட்சிகளுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தகவல் ராகவா லாரன்ஸ் மற்றும் கார்த்தி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த இரு படங்களுமே அதிகமான திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சிரிக்காம பார்த்தா நீங்க கில்லாடி! ரவுடின்னு சீன் போட்ட நிக்சனை.. நடுங்க விட்டு டோட்டல் டேமேஜ் செய்த பிக்பாஸ்!
 

click me!