நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு நடிகர் விஜய் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் அரசியல் வருகை விரைவில் இருக்கும் என கூறப்பட்டு வருகிறது. அதற்கான பணிகளை அவர் சைலண்டாக மேற்கொண்டு வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் நடந்து முடிந்த லியோ படத்தின் சக்சஸ் மீட்டில் கலந்துகொண்டபோது கூட 2026-ல் கப்பு முக்கியம் பிகிலு என பேசி தன் அரசியல் வருகையை சூசகமாக அறிவித்தார் விஜய்.
நடிகர் விஜய் சமீப காலமாக அரசியல் தலைவர்களின் பிறந்தநாளுக்கு போனி அழைத்து வாழ்த்து கூறுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதற்கு முன்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் பிறந்தநாளுக்கு அவர்களை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நடிகர் விஜய் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். அப்போது இருவரும் நலம் விசாரித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. நடிகர் சீமானும் விஜய்யும் கூட்டணி அமைக்க உள்ளதாக ஏற்கனவே அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடும் நிலையில், நடிகர் விஜய் சீமானுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் தற்போது தளபதி 68 படத்தின் படப்பிடிப்புக்காக தாய்லாந்து சென்று உள்ளார். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங்கை முடித்த பின்னர் நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் நுழைய உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. அது உண்மையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... ThugLife-ன் உண்மையான அர்த்தம் என்ன? ரத்தக்கறை படிந்த கருப்பு வரலாறு பற்றி தெரியுமா?