’மேகமாய் வந்து போகிறேன்’பாடலாசிரியர் காலமானார்...இறுதிச் சடங்கில் கலந்துகொண்டது நான்கே நபர்கள்...

Published : Sep 07, 2019, 09:42 AM IST
’மேகமாய் வந்து போகிறேன்’பாடலாசிரியர் காலமானார்...இறுதிச் சடங்கில் கலந்துகொண்டது நான்கே நபர்கள்...

சுருக்கம்

நடிகர் விஜயின் மிக பிரபலமான பாடலான ‘மேகமாய் வந்து போகிறேன்’பாடலை எழுதிய கவிஞர் முத்து விஜயன் நேற்று மஞ்சள் காமாலை நோயால் காலமானார். தமிழ்ப் படங்களில் 500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள அவரது இறுதிச் சடங்கில் நான்கே நான்கு நபர்கள் மட்டுமே கலந்துகொண்டதாக ஒரு அதிர்ச்சிகரமான தகவலை அவரது முகநூல் நண்பர்கள் எழுதியுள்ளனர்.

நடிகர் விஜயின் மிக பிரபலமான பாடலான ‘மேகமாய் வந்து போகிறேன்’பாடலை எழுதிய கவிஞர் முத்து விஜயன் நேற்று மஞ்சள் காமாலை நோயால் காலமானார். தமிழ்ப் படங்களில் 500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள அவரது இறுதிச் சடங்கில் நான்கே நான்கு நபர்கள் மட்டுமே கலந்துகொண்டதாக ஒரு அதிர்ச்சிகரமான தகவலை அவரது முகநூல் நண்பர்கள் எழுதியுள்ளனர்.

இயக்குநர் எஸ்.எழிலால் விஜய் நடித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானவர் கவிஞர் முத்துவிஜயன். அடுத்து பிரபுதேவ, சரத் நடித்த ‘பெண்ணின் மனதைத் தொட்டு’படத்தில் ‘கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா’என்ற பாடல் உட்பட 'கள்வனின் காதலி', 'தென்னவன்', 'நெஞ்சினிலே', 'வல்லதேசம்' உள்ளிட்ட படங்களிலும் பாடல்கள் எழுதியுள்ளார்.

சில படங்களில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இவர் தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களுக்கு வசனங்களும் எழுதியுள்ளார். கவிஞர் தேன்மொழியைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர். அதன்பின் முத்து விஜயன் பாடலாசிரியர் சங்கத்தில் தங்கி வந்தார்.அண்மைக்காலமாக மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். பாடலாசிரியர் சங்கம் மூலமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முத்து விஜயன்  நேற்று  உயிரிழந்தார். அவருக்கு வயது 48.

வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் முத்து விஜயனின் உடல் தகனம் செய்யப்பட்டது. இத்தனை படங்களில் பாடல் எழுதியிருந்தாலும் அவரது இறுதிச் சடங்கில் மொத்தம் 4 முதல் 5 நபர்கள் மட்டுமே கலந்துகொண்டனர் என்று வேதனையுடன் தங்களது முகநூல் பக்கத்தில் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

பகலும் நிலையானதல்ல.!
புகழும் நிலையானதல்ல.!
பகல் முடிந்து இரவு வரும்.!
புகழ் மறைந்து இகழ் வரும்.!
ஆதலால் !
மகுடம் மறந்து மனிதம் வளர்..... உருவம் நோக்காமல் உணர்வுகளை நேசி... எக்காலமும் அழியாது உன் புகழ் .
 தனது முகநூல் பக்கத்தில் முத்துவிஜயன்
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

25 ஆண்டுகளில் முதன்முறையாக படையப்பா படம் பார்த்த ரம்யா கிருஷ்ணன்... இத்தனை வருஷமா ஏன் பார்க்கல தெரியுமா?
கடைசியில் மீனாவிடம் 'சென்டிமென்ட்' டிராமாவை அரங்கேற்றிய தங்கமயில்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 விறுவிறுப்பு!