
ரஜினிகாந்தின் சிறு வயது போட்டோ பார்த்து இருக்கீங்களா.? அச்சு அசலாக பேரன் யாத்ரா போலவே இருக்காரு..!
சூப்பர் ஸ்டார் யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்ற பாடல் வரியை கேட்டு இருப்பீர்கள் .. ஆனால் அவரே சிறு குழந்தையாய் இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் பார்த்ததுண்டா...?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஸ்டைல் ஸ்டைலான புகைப்படம் பார்த்து இருப்போம். பேருந்தில் கண்டக்டர் வேலை செய்வது முதல் சினிமாவில் கால் பதிந்து வெற்றி நடை போட்டு இன்று அரசியலில் தனித்து போட்டியிடும் மாபெரும் மாஸ் நடிகராக உள்ளார் ரஜினிகாந்த்.
அவ்வளவு ஏன்? தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை அவர்கள் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட பின், அவர் வகித்து வந்த தலைவர் பதவி காலியாக உள்ளது.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவராக ரஜினிகாந்தை நியமனம் செய்ய வாய்ப்பு உள்ளது என்றும் அது குறித்த பேச்சுவார்த்தை மும்முரமாக சென்று கொண்டிருக்கிறது என செய்திகள் வெளியாகி உள்ளது.
இப்படி ஒரு நிலையில் மலரும் நினைவாய் ரஜினிகாந்தின் இது வரை யாரும் பார்த்திராத சிறு வயது போட்டோ ஒன்று சமூக வலைத்தளத்தில் அதிவேகமாக பரவி வருகிறது. சிறுவயதில் ரஜினியை போட்டோவில் பார்க்கும் போது ரஜினியின் மூத்த பேரனும், நடிகர் தனுஷின் மகனுமான யாத்ராவை போலவே தோற்றமளிக்கிறார்.
இந்த புகைப்படம் ரசிகர்களாகிய உங்களுக்காக..!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.