
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி, நீண்ட காலமாக ரிலீசுக்கு காத்திருக்கும் திரைப்படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இன்று ரிலீசாக இருந்த இந்த திரைப்படம் எதிர்பாராத சில காரணங்களால் திடீர் என மீண்டும் ரிலீஸ் தேதி தள்ளி போய் உள்ளது. அடுத்த வாரம் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். எனினும் இன்று 100 சதவீதம் வெளியாகும் என்கிற நம்பிக்கையில் காத்திருந்த ரசிகர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே.
இந்நிலையில் தனுஷ் தன்னுடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சூப்பர் தகவலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதாவது, நடிகர் தனுஷ் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், தாணு தயாரிப்பில் நடித்துள்ள திரைப்படமான, 'அசுரன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். இந்த படம், அக்டோபர் 4 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தனுஷின் ரசிகர்கள் செம்ம குஷியில் உள்ளனர்.
மேலும் இந்த படத்தின் டிரைலர் வரும் 8ஆம் தேதி வெளியாகவுள்ளது'. இந்த படத்தில், தமிழில் முதல் முறையாக தனுஷுக்கு ஜோடியாக அறிமுகமாகிறார், பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார். இவரை தொடர்ந்து, நடிகர் பிரகாஷ் ராஜ், பாலாஜி சக்திவேல், பசுபதி, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.