13 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் ரீ எண்ட்ரி கொடுக்கும் குட்டி ராதிகா...

By Muthurama Lingam  |  First Published Sep 6, 2019, 6:43 PM IST

’இயற்கை’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி பரவலாக கவனம் பெற்ற குட்டி ராதிகா 13 ஆண்டுகால இடைவெளிக்குப் பின் தமிழுக்கு மீண்டும் திரும்புகிறார். இதே படத்தில் ரஜினியின் உயிர் நண்பர் ராஜ் பகதூர் குட்டி ராதிகாவின் தந்தையாக நடிக்கிறார்.
 


’இயற்கை’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி பரவலாக கவனம் பெற்ற குட்டி ராதிகா 13 ஆண்டுகால இடைவெளிக்குப் பின் தமிழுக்கு மீண்டும் திரும்புகிறார். இதே படத்தில் ரஜினியின் உயிர் நண்பர் ராஜ் பகதூர் குட்டி ராதிகாவின் தந்தையாக நடிக்கிறார்.

எஸ்.பி.ஜனநாதன் இயக்குநராக அறிமுகமான ’இயற்கை’ படத்தில் சாம், அருண் விஜய், குட்டி ராதிகா ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். தாஸ்தோவெஸ்கியின் வெண்ணிற இரவுகள் நாவலைத் தழுவி தமிழுக்கு ஏற்ப எடுக்கப்பட்ட இப்படத்தில் குட்டி ராதிகாவுக்கு தமிழில் ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது. ஆனால் அடுத்தடுத்து சொதப்பலான படங்களில் நடித்ததால் 2006ம் ஆண்டோடு தமிழ் சினிமாவை விட்டு வெளியேறி கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர் குமாரசாமியை ரகசிய திருமண்ம் செய்துகொண்டார்.

Tap to resize

Latest Videos

இந்நிலையில் 13 ஆண்டுகால கேப்புக்குப் பின், தற்போது நவரசன் இயக்கத்தில் ’தமயந்தி’ என்ற ஹாரர் த்ரில்லர் படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிறது.  மேலும் இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்படுகிறது.படத்தில் குட்டி ராதிகாவை கமிட் செய்தது குறித்துப்பேசிய இயக்குநர் நவரசன், “அருந்ததி, பாகமதி ஆகிய படங்கள் போன்ற ஹாரர் த்ரில்லர் படம் தமயந்தி. இதில் நடிக்க முதலில் அனுஷ்காவை தொடர்புகொண்டேன். அவருக்கு திரைக்கதை மிகவும் பிடித்திருந்தாலும் மற்ற படங்களில் ஒப்பந்தமாகியிருந்ததால் அவரால் நடிக்கமுடியவில்லை. எனது இரண்டாவது தேர்வு குட்டி ராதிகா. அவரும் இரண்டு கன்னடப் படங்களில் பிஸியாக இருந்தார். இருப்பினும் ஒருமுறை கதையைக் கேளுங்கள் என்று கூறி அவரிடம் விவரித்தேன். கேட்டபின் தான் நடிப்பதாக உடனே சம்மதித்தார். இதற்காக மற்ற படங்களின் தேதிகளை மாற்றியமைத்தார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், பெங்களூர், மைசூர், மற்றும் கேரளாவின் சில இடங்களில் நடைபெற்றுள்ளது. “இரண்டு காலகட்டங்களின் பின்னணியில் கதை நடைபெறுகிறது. அதில் ராதிகா இளவரசியாக நடிக்கிறார். ரஜினிகாந்தின் நண்பர் ராஜ் பகதூர் அவருக்கு அப்பாவாக நடிக்கிறார்’என்றார். தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்புகள் நடந்துவரும் நிலையில் இப்படம் நவம்பர் அல்லது டிசம்பரில் வெளியாகும் என்று தெரிகிறது.

click me!