'படையப்பா'வுக்குப் பிறகு, தமிழ் திரையுலகில் திரையரங்குக்கு மக்கள் கூட்டம் வருவது 'பாகுபலி 2' படத்திற்க்கா!!!

First Published May 4, 2017, 12:54 PM IST
Highlights
Tamil Audience crowds come to theaters for baahubali 2 after padayappa


'பாகுபலி 2’ படத்துக்கு தமிழக ரசிகர்களிடையே மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது. வசூல் சாதனைகளை முறியடித்து திரையரங்குகளில் இப்படம் தொடர்ந்து ஹவுஸ் புல்லாக ஓடுவதால் நாளை வெளியாகவிருந்த 'தொண்டன்', 'எய்தவன்' ஆகிய படங்களின் ரிலீஸ் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் ஒட்டுமொத்த வசூலையும் இந்த ஒரே படம் தூக்கி அடித்து விட்டதென்றே சொல்லலாம், 5 நாட்கள் வசூலின் மூலமாக 2-வது இடத் தைப் பிடித்துள்ளது 'பாகுபலி 2'. அடுத்த சில தினங்களில் மொத்த வசூல் பட்டியலில் முதல் இடத்தைப் பிடிக்கும் என தெரிகிறது.

தென்னிந்தியா மட்டுமின்றி பாலிவுட்டிலும் இப்படம் வசூலிலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியில் நேற்றுவரை 200 கோடி ரூபாய் வசூல் செய்த படங்களின் பட்டியலில் 'பாகுபலி 2' விரைவில் இணையவுள்ளது.

'பாகுபலி 2' திரைப்படம் தொடர்ந்து அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதால், 'எய்தவன்' படத்தின் விநியோகஸ்தரான சக்திவேலன், அப்படத்தின் வெளியீட்டை மாற்றியமைத்துள்ளார்.

இதுபற்றி அவர் இந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ''15 ஆண்டுகளாகத் தமிழ் திரை யுலகில் இருக்கிறேன். இப்படி யொரு ரசிகர்கள் கூட்டம் எந்த வொரு படத்துக்கும் வந்ததில்லை. 'எந்திரன்' படத்துக்குக் கூட இவ்வளவு கூட்டம் கிடையாது.

'படையப்பா'வுக்குப் பிறகு; தமிழ் திரையுலகில் திரையரங்குக்கு மக்கள் அதிகமாக வந்து பார்த்த படமாக 'பாகுபலி 2' இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சினிமாவுக்கே செல்லாத ரசிகர் களையும் இப்படம் திரையரங் குக்கு இழுத்து வந்துள்ளது. தமிழக விநியோகத்தில் கண்டிப்பாக இப்படம் சாதனைதான். முந்தைய அனைத்துச் சாதனை களையும் முறியடித்துவிடும்'' என்றார்.

இந்நிலையில், இந்தியளவில் அதிக வசூல் செய்த 'தங்கல்' படத்தின் சாதனையை 'பாகுபலி 2' முறியடித்து, இந்தியளவில் அதிக வசூல் செய்த படம் என்ற மிகப்பெரும் சாதனையை நிகழ்த்தும் என்பதில் சந்தேகமில்லை என இந்தி திரையுலக வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

click me!