
சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் 'வாணி ராணி' தொடரில் நடித்த நடிகை சபீதா, அந்த தொடரின் தயாரிப்பு நிறுவன மேலாளருடன் வீட்டு வாசலில் அடி தடி சண்டை போட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விஷயத்தில் நடிகை சபீதா, மேலாளருடன் முறையற்ற உறவு வைத்திருந்ததாக பல இணையதளங்களும், சமூக இணையதளங்களும் செய்தி வெளியிட்டன.
இந்த சம்பவத்திற்கு ஏற்கனவே நடிகை சபீதா விளக்கம் அளித்திருந்தார். அந்த மேலாளர் தனது அப்பா வயது உள்ளவர் என்றும், அவரிடம் தான் கொடுத்த கடனை திரும்பி கேட்கவே அவருடைய வீட்டிற்கு சென்றதாகவும், அப்போதுதான் பிரச்சனை ஏற்பட்டு அது கைகலப்பில் முடிந்ததாகவும், அதை தவிர அவருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், இரண்டு நாட்கள் தங்கியிருந்ததாகவும் வெளிவந்த செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும் அவர் தெரிவித்திருந்தார்
இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் இதே விஷயம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர், 'அன்று நடைபெற்ற சம்பவத்தில் இருந்தது நான் தான். அதை மறுக்க வில்லை. ஆனால் எங்களுக்குள் எந்த தகாத உறவும் இல்லை.
ஒரே ஒரு நாள் டி,.ஆர்.பி ரேட்டிங்கிற்காக பொய்யான செய்தியை பரப்பி என் வாழ்க்கையையே ஊடகங்கள் சிதைத்துவிட்டன. உங்களுக்கு ஒரு வெறும் செய்தியாக வெளிவரும் ஒரு பேப்பர். ஆனால் எனக்கு அது வாழ்நாள் கறை.
இந்த சம்பவத்திற்கு பின்னர் எந்த ஒரு மானமுள்ள பெண்ணாக இருந்தாலும் தற்கொலை செய்திருப்பார். ஆனால் எனக்கு தற்கொலையில் நம்பிக்கை இல்லை.
அதுமட்டுமின்றி நான் என் அம்மாவை காப்பாற்றியாக வேண்டும். நான் தற்கொலை செய்துவிட்டால் அவர் அனாதையாகிவிடுவார். இருப்பினும் இரண்டு நாட்கள் அவருடன் நான் தங்கியிருந்ததற்கான ஆதாரத்தை யாராவது வெளியிட்டால் நான் தற்கொலை செய்ய தயாராக இருக்கின்றேன்' என்று அந்த வீடியோ நடிகை சபீதா ஆவேசமாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.