மகா கும்பமேளாவில் ரிலீஸ் செய்யப்பட்ட தமன்னாவின் ஒடேலா 2 டீசர் இதோ

Published : Feb 22, 2025, 11:40 AM IST
மகா கும்பமேளாவில் ரிலீஸ் செய்யப்பட்ட தமன்னாவின் ஒடேலா 2 டீசர் இதோ

சுருக்கம்

Odela 2 Teaser : உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நடிகை தமன்னா நடித்த ஒடேலா 2 படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

தெலுங்கில் அசோக் தேஜா இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு ஒடேலா திரைப்படம் ரிலீஸ் ஆனது. இதில் ஹெபா பட்டேல், சாய் ரோனாக் உள்பட இளம் நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். விறுவிறுப்பான கிரைம் திரில்லர் படமாக உருவாகி இருந்த இப்படம் மாபெரும் வெற்றியை ருசித்தது. ஒடேலா படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை பிரம்மாண்டமாக எடுக்க முடிவெடுத்த படக்குழு, இதில் நடிகை தமன்னாவை முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முடிவெடுத்தனர்.

படத்தின் கதை கேட்டதும் நடிகை தமன்னாவுக்கும் பிடித்துப் போனதால் அவரும் ஓகே சொல்லி நடித்தார். ஒடேலா 2 திரைப்படம் பெரும்பாலும் வாரணாசியில் தான் படமாக்கப்பட்டது. இப்படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகளவில் உள்ளன. இதற்காக பிரத்யேக பயிற்சிகள் பெற்று, டூப் போடமலேயே நடித்திருக்கிறார் நடிகை தமன்னா. ஒடேலா 2 திரைப்படம் தற்போது ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இதையும் படியுங்கள்... துளியும் மேக்கப் போடாமல் ஷாப்பிங் வந்த தமன்னா! ஷாக் ஆன ரசிகர்கள்

இந்நிலையில், அப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவை வித்தியாசமாக நடத்தி உள்ளது படக்குழு. அதன்படி உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ஒடேலா படத்தின் டீசரை வெளியிட்டு கவனம் ஈர்த்துள்ளது படக்குழு. இந்த டீசர் வெளியீட்டு விழாவில் நடிகை தமன்னா, இயக்குனர் அசோக் தேஜா உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

மது தயாரித்துள்ள இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். செளந்தர் ராஜன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தில் நடிகை தமன்னா உடன் ஹெபா பட்டேல், யுவா, நாக மகேஷ், வம்சி, சுரேந்தர் ரெட்டி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரிவேணி சங்கமத்தில் படகில் பயணித்தபடியே ஒடேலா 2 படத்தின் டீசரை ரிலீஸ் செய்துள்ளனர். திகிலூட்டும் காட்சிகளுடன் கூடிய இப்படத்தின் டீசர் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... கேரவனில் அந்தச் சம்பவம் நடந்துச்சு; என்னால அழக்கூட முடியல: நடிகை தமன்னா வேதனை!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

கிரிஷை ஏன்டி கடத்த சொன்ன... விஜயாவை பொழந்துகட்டிய அண்ணாமலை - சிறகடிக்க ஆசை சீரியலில் செம சம்பவம்
நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!