
ரகுல் ப்ரீத் சிங்கும் அவருடைய கணவரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானியும் தற்போது அவர்களின் முதலாம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடி, அவங்க வாழ்க்கையில நடந்த "நிறைய நினைவுகளை" பகிர்ந்து கொண்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை, ரகுல் அவங்களோட இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவரது வாழ்க்கைப் பயணத்தில் நடந்த எல்லா ஸ்பெஷல் மொமெண்ட்ஸையும் ஒரு வீடியோவா பதிவேற்றி இருந்தார். அந்த விடியோவில் அவங்க வெக்கேஷன் போனது, கல்யாணத்துல நடந்த கலாட்டா, மஞ்சள் தண்ணி ஊத்துனதுன்னு நிறைய இருந்துச்சு.
ரகுல், அவங்களோட ரீசண்ட் படமான 'மேரே ஹஸ்பண்ட் கி பிவி' படத்துல இருந்து "சன்னா து பேமிசல்" பாட்டை பேக்ரவுண்ட் மியூசிக்கா வச்சாங்க. அந்த வீடியோவோட, "ஒரு வருஷம், நிறைய நினைவுகள், இன்னும் நிறைய வருஷம் இருக்கு"ன்னு கேப்ஷன் கொடுத்திருந்தாங்க.
ஜாக்கி - ரகுல் ஜோடி போன வருஷம், பிப்ரவரி 21-ஆம் தேதி கோவாவுல நெருங்கிய சொந்த பந்தங்களுக்கு இடையே திருமணம் செய்து கொண்டனர். சீக்கிய முறைப்படி ஒரு திருமணமும், சிந்தி முறைப்படி இன்னொரு திருமணமும் இவர்களுக்கு நடந்தது. திருமணத்தில் ரகுல் பிங்க் கலர்ல வைரக்கற்கள் பதிச்ச லெஹங்கா அணிந்திருந்தார். ஜாக்கி ஐவரி கலர்ல சிக்கன்காரி ஷெர்வானி போட்டிருந்தாங்க, அதுல 'சினார' டிசைன் இருந்துச்சு.
இந்த கல்யாணத்துல ரகுல், ஜாக்கியோட குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர். இவர்களை தவிர அக்ஷய் குமார், டைகர் ஷெராஃப், ஷில்பா ஷெட்டி, அர்ஜுன் கபூர், வருண் தவான், ஈஷா தியோல்ன்னு பாலிவுட்ல இருக்கற முக்கியமான ஆளுங்க எல்லாரும் வந்து புது ஜோடிய வாழ்த்தினாங்க.
தற்போது ரகுல் 'மேரே ஹஸ்பண்ட் கி பிவி' படத்துல அர்ஜுன் கபூர், பூமி பெட்னேகர் கூட நடிச்சிட்டு இருக்காங்க. இந்த படத்துல டினோ மோரியா, ஹர்ஷ் குஜ்ரால், சக்தி கபூர்ன்னு நிறைய பேர் இருக்காங்க. முதல்ல கேல் கேல் மெயின், பதி பட்னி அவுர் வோஹ் மாதிரி படங்களை எடுத்த முடாசர் அஜிஸ் தான் இந்த 'மேரே ஹஸ்பண்ட் கி பிவி' படத்தையும் இயக்குறாரு. வாசு பக்னானி & பூஜா ஃபிலிம்ஸ் சேர்ந்து வழங்குற இந்த படத்த வாசு பக்னானி, ஜாக்கி பக்னானி, தீப்ஷிகா தேஷ்முக் தயாரிச்சிருக்காங்க. 'மேரே ஹஸ்பண்ட் கி பிவி' திரைப்படம் பிப்ரவரி 21-ஆம் தேதி தியேட்டர்ல, அதாவது இன்னைக்கு ரிலீஸ் ஆச்சு.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.