டேட்டிங் சென்றபோது... பிரபல நடிகருக்கு லிப்லாக் கிஸ் கொடுத்த தமன்னா - காட்டுத்தீ போல் பரவும் வீடியோ

Published : Jan 03, 2023, 10:52 AM IST
டேட்டிங் சென்றபோது... பிரபல நடிகருக்கு லிப்லாக் கிஸ் கொடுத்த தமன்னா - காட்டுத்தீ போல் பரவும் வீடியோ

சுருக்கம்

கோவாவில் புத்தாண்டு கொண்டாடிய நடிகை தமன்னா, அங்கு பிரபல நடிகருக்கு லிப்லாக் கிஸ் கொடுத்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தமன்னா. 10 ஆண்டுகளுக்கு முன் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி என திரும்பிய பக்கமெல்லாம் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்த தமன்னாவுக்கு தற்போது தமிழில் பட வாய்ப்புகளே இல்லை. இதனால் இந்தி, மலையாளம், தெலுங்கு போன்ற பிறமொழிகளில் படு பிசியாக நடித்து வருகிறார்.

நடிகை தமன்னா அவ்வப்போது காதல் சர்ச்சைகளில் சிக்குவதுண்டு. அந்த வகையில் தற்போது அவர் பிரபல இந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக தகவல் பரவி வருகிறது. இதனை உறுதி செய்யும் விதமாக சமீப காலமாக அவர்கள் இருவரும் எங்கு சென்றாலும் ஜோடியாகவே சென்று வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... ஷூட்டிங் முதல் ரிலீஸ் வரை ‘தளபதி 67’க்கு லோகேஷ் போட்ட பக்கா பிளான்... எப்புட்ரா என விஜய்யே வியந்துட்டாராம்

இவர்கள் காதலிப்பதாக தகவல் பரவுவதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் நடந்து முடிந்த புத்தாண்டு பார்ட்டி தான். நடிகை தமன்னா இந்த புத்தாண்டை கோவாவில் கொண்டாடினார். இதற்காக அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவுநேர பார்ட்டியில் ஜிகுஜிகுவென மின்னும் ரோஸ் நிற கவர்ச்சி உடை அணிந்து வந்திருந்தார் தமன்னா.

புத்தாண்டு பிறந்ததும் அனைவரும் ஹாப்பி நியூ இயர் என ஆனந்தத்தில் கத்தியபோது எடுத்த வீடியோவில் நடிகை தமன்னாவும், விஜய் வர்மாவும் கட்டிப்பிடித்து லிப்லாக் முத்தம் கொடுத்துக்கொண்டதும் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து தான் அவர்கள் இருவரும் காதலிப்பதாகவும், தற்போது டேட்டிங் செய்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

இதையும் படியுங்கள்... யம்மாடியோ... ரூ.3000 கோடியா..! அதகளமான அறிவிப்பை வெளியிட்ட கேஜிஎப் பட நிறுவனம்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!