மணிரத்னம் கமல் ஹாசன் கூட்டணியில் உருவாகும் கேஹெச்234 (KH234) ஆவது படத்தில் த்ரிஷா ஹீரோயினாக நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் கமல் ஹாசன். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் படம் கடந்த ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. கிட்டத்தட்ட 150 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் ரூ.500 கோடி வரையில் வசூல் குவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. விக்ரம் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
சைலண்டாக ஷூட்டிங் தொடங்கிய தளபதி67 டீம்: முழு வீச்சில் நடந்த முதல் நாள் ஷூட்டிங்!
இந்தியன் 2 படத்தில் கமல் ஹாசன் உடன் இணைந்து சுதீப், குல்சன் குரோவர், சித்தார்த், ராகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், குரு சோமசுந்தரம், மனோபாலா, தீபா சங்கர், வெண்ணிலா கிஷோர், ஜெயபிரகாஷ், ஜார்ஜ் மரியன், சிவாஜி குருவாயூர், வினோத் சாகர் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் மற்றும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்தின் உதயநிதி ஸ்டாலின் இருவரும் இந்தப் படத்தை இணைந்து தயாரித்துள்ளனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். ரத்னவேலு மற்றும் ரவி வர்மன் ஆகிய இருவரும் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கின்றனர். இந்தப் படம் தசரா பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்தியன் 2 படத்தைத் தொடர்ந்து கமல் ஹாசன் நடிக்கும் கேஹெச் 234 (KH234) படத்தை இயக்குநர் மணி ரத்னம் இயக்குகிறார் என்று கமல் ஹாசனின் பிறந்த நாளன்று அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இதற்கு முன்னதாக மன்மதன் அம்பு மற்றும் தூங்காவனம் ஆகிய இரு படங்களில் கமல் ஹாசனுடன் இணைந்து த்ரிஷா நடித்துள்ளார். இந்தியன் 2 மற்றும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணியில் மணி ரத்னம் பிஸியாக இருப்பதால் இந்த இரு படங்களின் அனைத்து பணிகளும் முடிந்த பிறகு கேஹெச்234 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொன்னியின் செல்வன் 2 படம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பீஸ்ட் படத்தின் 24 மணி நேர டிரைலர் சாதனையை முறியடிக்க தவறிய அஜித் குமாரின் துணிவு!