
தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் முன்னணி நாயகியாக வலம் வருபவர் தமன்னா. முதலில் பாலிவுட் \ படத்தில் தா இவர் அறிமுகமாகி இருந்தார். இதை அடுத்த தெலுங்கில் ஸ்ரீ என்னும் படத்தில் நடித்த தமன்னாவிற்கு தமிழில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ரவி கிருஷ்ணா நடித்த கேடி படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார். மற்றொரு நாயகியாக இலியானா தோன்றியிருந்தார். இந்த படத்தை தொடர்ந்து வியாபாரி படத்தில் எஸ் ஜே சூர்யாவிற்கு ஜோடியாக சாவித்திரி வேடத்தில் நடித்திருந்தார் தமன்னா.
பின்னர் கல்லூரி இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. இந்த படத்தில் மாணவியாக வந்து மனங்களை கொள்ளை கொண்டு இருந்தார் தமன்னா. இதற்கிடையே தெலுங்கு பக்கம் திரும்பிய தமன்னா தனுஷின் படிக்காதவன் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு ரீ என்ட்ரி கொடுத்தார். அதை அடுத்து அயன், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, பையா, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை, தோழா என அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்..
மேலும் செய்திகளுக்கு..சந்திரமுகி 2-வுக்காக தடபுடலாக தயாராகும் ராகவா லாரன்ஸ்... கெட்டப் சேஞ்ச் குறித்து அவரே வெளியிட்ட பதிவு
2013 ஆம் ஆண்டு அஜித்குமாருடன் வீரம், தேவி, பாகுபலி என தொடர் படங்களில் நடித்த இவர் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். இதில் பாகுபலி சீரிஸ் இவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று கொடுத்தது. கத்தியும் கவர்ச்சியுமாய் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தார். இந்த படத்தை அடுத்து தனக்கான கதைக்களத்தை தேர்ந்தெடுக்க ஆரம்பித்தார் தமன்னா. அதன்படி இவர் நடிப்பில் வெளியானது பெட்ரமாஸ். ஹாரர் மூவியான இந்த படம் போதுமான வரவேற்பை பெறவில்லை.
மேலும் செய்திகளுக்கு...தஞ்சை ப்ரோமோஷனுக்கு வருவதை ஆதித்ய கரிகாலன் ஸ்டைலில் சொன்ன சீயான்
மீண்டும் நாயகர்களுக்கு ஜோடியாக முடிவை எடுத்த தமன்னா தற்போது பாலிவுட்டில் பிஸியாக இருக்கிறார். ஆனால் இவருக்கு தமிழில் அதிக படங்கள் ஏதுமில்லை. இதற்கிடையே அவ்வப்போது குதூகலமான புகைப்படங்களை வெளியிடும் இவர் கண்கள் போன்ற வரைபடம் இடப்பட்ட உடையணிந்து ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...40-லும் குறையாத இளமை..குழந்தையுடன் பிகினி வீடியோக்களை தட்டிவிடும் ஸ்ரேயா
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.