“உங்களால் தான் எங்களுக்கு இந்த நிலை”... பாரதிராஜாவை ஜாடையாக தாக்கிய டி.ராஜேந்தர்...!

By Kanimozhi PannerselvamFirst Published Oct 23, 2020, 2:28 PM IST
Highlights

 மேலும் சங்கத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே தான் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதாகவும் கூறினார். 
 

பல கட்ட சட்ட போராட்டங்களைக் கடந்து பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு டிசம்பர் 31ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்த வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து நவம்பர் 22ம் தேதி தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடத்தப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும்  இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் நவம்பர் 12ம் தேதி வெளியிடப்படும் அடையாறு எம்.ஜி.ஆர் ஜானகி கலை கல்லூரியில் காலை 8மணி முதல் மாலை 4மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

ஏற்கனவே தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் அணியோடு சேர்த்து 5 அணிகள் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளன. இதனிடையே தன்னை விட தயாரிப்பாள சங்க தேர்தலில் போட்டியிட சரியான ஆள் யாருமே இல்லை என மார்தட்டிக்கொள்ளும் டி.ராஜேந்தரும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள டி.ஆர்., பிற பதவிகளில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனுக்களையும் பெற்று வருகிறார். 

 

இதையும் படிங்க: குழந்தை பெற்ற பிறகும் கும்முன்னு இருக்கும் ஆல்யா மானசா... மணப்பெண் கெட்டப்பில் மனதை மயக்கும் போட்டோஸ்...!

இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த டி.ராஜேந்தர், ஒரு சிலர் பிரிந்து சென்று நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்துவதால் தான் எங்களுடைய சங்கம் கிடப்பு சங்கமாக மாறிவிட்டது என இயக்குநர் பாரதிராஜாவை மறைமுகமாக விமர்சித்தார். மேலும் சங்கத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே தான் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதாகவும் கூறினார். 

click me!