
நாளுக்கு நாள் கடுமையான டாஸ்குகள் மூலம் போட்டியாளர்களை கடுப்பேற்றி வரும் பிக்பாஸ், இன்று எலிமினேஷனை குறிக்கும் டாஸ்க் ஒன்றை வைத்துள்ளார். இதுகுறித்து அனிதா படித்து கூறுவதும், சுரேஷ் செய்கின்ற வேடிக்கையான செயலும் தான் இன்றைய புரோமோவில் இடம்பெற்றுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அடிப்படையில், 1 முதல் 16 எண் கொண்ட மேசைகள் வைக்கப்பட்டுள்ளது. இதில் கடைசி வரை பிக்பாஸ் வீட்டில் நிலைத்து விளையாடுபவர் என யாரை மற்ற போட்டியாளர்கள் நினைக்கிறார்களோ அவரை 1 மேசையில் நிற்க வைத்து வரிசை படுத்த வேண்டும்.
அந்த வகையில் சுரேஷ், ரம்யா மிகவும் வலிமையான போட்டியாளர் என தெரிவிக்கிறார். இதில் இருந்து ரம்யாவிற்கு 1 எண்ணிக்குரிய மேசை போவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. இதை தொடர்ந்து இந்த வாரம் எலிமினேஷன் செய்யப்படுவர் என போட்டியாளர்கள் ஒருவரை தேர்வு செய்யும் முன்னரே, சுரேஷ் முந்திக்கொண்டு, 16 ஆவது மேசையை பிடித்து கொள்கிறார்.
இவரின் வேடிக்கையான செயலை பார்த்து, அர்ச்சனா உள்ளிட்ட சிலர் எவ்வளவு நேரம் அங்கேயே நிற்பீர்கள் வாங்க என அழைப்பதும் இந்த புரோமோவில் இடம்பெற்றுள்ளது.
உள்ளே பல போட்டியாளர்களால் டார்கெட் செய்யப்படும் சுரேஷ், மக்கள் மத்தியில் அதிக ஓட்டுக்களை பெற்று, வெற்றி பெரும் போட்டியாளர்களின் ஒருவராக இருக்கிறார் என்பது, அவருக்கே இன்னும் தெரியவில்லை?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.