
நடிகை நயன்தாரா முதல் முறையாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நடிக்க உள்ள திரைப்படம், 'நெற்றிக்கண்' இந்த படத்தை மிலிண்ட் ராவ் என்பவர் இயக்க உள்ளார். இந்த படத்தை விக்னேஷ் சிவனின் ரவுடி பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இந்த படத்தின் போஸ்டர், வெளியாக உள்ளதாக நேற்று... ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட விக்னேஷ் சிவன், நானும் ரவுடிதான் படத்துடன் 'நெற்றிக்கண்' படத்தையும் ஒப்பிட்டு மிகவும் எமோஷனலாக ட்விட் செய்திருந்தார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி ‘நானும் ரவுடிதான்’ வெளி வந்து 5 வருடங்கள் முடிவடைந்து இருக்கின்றது. அளவில்லா அன்பு மற்றும் பேதரவால் ’நானும் ரவுடிதான்’ பல இதயங்களை வென்றெடுத்து உள்ளது. எங்கள் வாழ்வை மாற்றியது.
ஐந்து வருடங்களுக்கு பிறகு தற்போது இதே நாளில் எங்கள் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ’நெற்றிக்கண்’ தயாராக உள்ளது. என்றும் எங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் உங்களின் அதே அளவிலான அன்பையும் ஆதரவையும் இந்த திரைப்படத்திற்கும் தருவீர்கள் என நம்புகிறோம். ஆசீர்வாதம் அளித்த கடவுளுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி. நெற்றிக்கண் பஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது நயன்தாராவின் நெற்றிகண் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் நயன்தாரா நெற்றியின் ரத்தம் சொட்ட சொட்ட, கையில் இரும்பு ஆயுதத்தை வைத்துள்ளார். அவரை ஒரு ஆணின் நிழல் உற்று நோக்குவது போன்றும் உள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வளைத்ததில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.