மூன்றாவது முறையாக கொரோனா டெஸ்ட் எடுத்து கொண்ட குஷ்பு...? இது தான் காரணம்..!

Published : Oct 22, 2020, 06:14 PM IST
மூன்றாவது முறையாக கொரோனா டெஸ்ட் எடுத்து கொண்ட குஷ்பு...? இது தான் காரணம்..!

சுருக்கம்

நடிகை குஷ்பூ மூன்றாவது முறையாக கொரோனா பரிசோதனை செய்து கொண்டதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  

நடிகை குஷ்பூ மூன்றாவது முறையாக கொரோனா பரிசோதனை செய்து கொண்டதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னணி நடிகையான குஷ்பு நடிப்பையும் தாண்டி அரசியலிலும் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். அந்த வகையில் காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த குஷ்பு, சமீபத்தில் டெல்லிக்கு சென்று பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார்.  

காங்கிரஸ் கட்சியில் இருந்த போது பாஜக மற்றும் பிரதமர் மோடியையும் வெளுத்து வாங்கியவர் குஷ்பு.  திடீரென பாஜகவில் இணைத்து பலரை அதிர்ச்சியடைய வைத்தது. பின்னர் காங்கிரஸ் கட்சி குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் விமர்சித்து, பின்னர் அதற்க்கு மன்னிப்பும் கேட்டார்.

பாஜக கட்சியில் இணைந்ததால், தொடர்ந்து பல கூட்டங்களிலும், பாஜக தொண்டர்களையும் இடைவிடாமல் சந்தித்து வந்தார். இதனால் கொரோனா வைரஸ் டெஸ்ட் மூன்று முறை எடுத்து கொண்டதாகவும், அதில் தனக்கு நெகடிவ் என வந்ததாக தெரிவித்துள்ளார்.  மேலும் உங்கள் ஆசிர்வாதங்களுக்கு நன்றி'' என அவர் பதிவிட்டுள்ளார். 

அரசியலில் ஒரு பக்கம் ஆர்வமாக இருக்கும் குஷ்பு விரைவில், நீண்ட இடைவெளிக்கு பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்து வரும் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு துவங்கியதும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லியோ பட சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய ஜன நாயகன்.... முன்பதிவில் மாஸ் காட்டும் தளபதி...!
கோடி கோடியாய் சம்பாதித்தாலும் தங்கச்சி விஷயத்தில் ராஷ்மிகா எடுத்த தடாலடி முடிவு