
பிக்பாஸ் நிகழ்ச்சி பல எதிர்பாராத விஷயங்களோடு விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. நேற்றைய தினம் கொடுக்கப்பட்ட நாடா... காடா... டாஸ்கில் விளையாட்டு விபரீதமாகி, சுரேஷின் மற்றொரு குழந்தை முகத்தை மக்கள் முன் கொண்டுவந்தது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புரோமோவில், ரியோ வசமாக வாயை விட்டு சிக்க வெளுத்து வாங்கியுள்ளார் ரம்யா பாண்டியன்.
தற்போதைய வீட்டின் தலைவரான ரியோ அனைவரையும் ஒன்றிணைத்து பேச முயற்சி செய்கிறார். அப்போது ரம்யா பாண்டியன், ஷிவானி, உள்ளிட்ட மூன்று பேர் மீது ஏதோ குற்றத்தை முன் வைக்கிறார். பின்னர் மிகவும் கோவமாக குரூப்பிஸம் என்பது இந்த வீட்டில் திரும்ப திரும்ப பேசப்படுவதாக கூறுகிறார்.
இதற்கு ரம்யா பாண்டியன் நீங்க குரூப்பிஸம் பற்றி நீங்கள் பேசுவீர்கள் என தெரியாது என நச் பதிலடி கொடுத்ததோடு, உங்கள் மண்டையில் குரூப்பிஸம் என்பது உள்ளதால் தான் நீங்கள் அதை பற்றி பேசுகிறீர்கள் என பாய்ண்ட் பிடித்து பேசி ஸ்கோர் செய்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.