
பாஜகவில் நடிகை குஷ்பு இணைந்ததை அடுத்து நடிகர் விஷால் அக்கட்சியில் சேர உள்ளதாக் தகவல்கள் பரவின. அதை முற்றிலும் வதந்தி என விஷால் மறுத்தார். அதேபோல் நடிகை சுகன்யாவும் அக்கட்சியில் இணைவதாக வெளியான தகவல்களை மறுத்தார். மேலும் தனக்கு அரசியலில் முற்றிலும் நாட்டமில்லை எனக்கூறினார்.
நடிகர் விஜய்யின் அப்பாவும், பிரபல நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி வந்தன. இது முற்றிலும் தவறான தகவல். இதுமாதிரியான தகவல்களை யார் பரப்புகிறார்கள் என தெரியவில்லை எனக்கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இருப்பினும் அந்த வதந்தி கொளுந்துவிட்டு எரிந்து வந்தது.
இதையும் படிங்க: பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவா இது? மார்டன் உடையில் என்னம்மா போஸ் கொடுத்து அசத்தியிருக்காங்க...!
இந்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள எஸ்.ஏ.சந்திரசேகர், “நான் பாஜகவில் சேரப்போகிறேனா என்ற கேள்விக்கே இடமில்லை. எனக்கென்று தனியாக ஓர் அமைப்பு உள்ளது. அதை வலுப்படுத்துவதில்தான் எனது கவனம் உள்ளது.விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படுகிறபோது அரசியல் கட்சியாக மாறும். நாமாக அரசியலுக்கு வருவதைவிட மக்கள் அழைத்து அரசியலுக்கு வரும்போது சக்தி வாய்ந்ததாக இருக்கும். மக்கள் அழைக்கும்போது விஜய் அரசியலுக்கு வருவார். பாஜவுடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இடம் கிடையாது” என்று எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.