
சுவாதி கொலை வழக்கு படம் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எடுக்கப்பட்ட படம் இல்லை எனவும், சமூக அக்கறையோடு எடுக்க்கப்பட்ட படம் எனவும் அப்படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.
கடந்த ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் சாப்ட்வேர் பெண் இன்ஜினியர் ஸ்வாதி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ராம்குமார் என்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆனால், ராம்குமார் சிறையில் இருந்த மின்வயரை வாயால் கடித்து, தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஜெயசுபஸ்ரீ புரடெக்ஷன் சார்பில் எஸ்.கே.சுப்பையா, ஸ்வாதி கொலை சம்பவத்தை திரைப்படமாக தயாரிக்கிறார். விஜயகாந்த் நடித்த உளவுத்துறை படத்தை இயக்கிய எஸ்.பி.ரமேஷ்செல்வன் இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்துக்கு‘ஸ்வாதி கொலை வழக்கு’ என பெயரிடப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த சுவாதி கொலை வழக்கு திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரி, சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன் டி.ஜி.பி. அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார்.
படம் வெளியானால் தனது குடும்பத்தினர் மனரீதியாக பாதிக்கப்படுவார்கள் எனவும் தங்களிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து திரைப்பட இயக்குனர் ரமேஷ் செல்வன் மற்றும் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சுவாதி கொலை வழக்கு திரைப்படம் யாருடைய மனதையும் புண்படும் நோக்கத்தோடு எடுக்கப்பட்ட படம் இல்லை எனவும், சுவாதி அல்லது ராம்குமார் அல்லது காவல் துறையினரை தவறாக சித்தரிப்பதற்காக எடுக்கப்பட படம் இல்லை எனவும் தெரிவித்தனர்.
இந்த படம் சமூக அக்கறையோடு எடுக்கப்பட்ட படம் எனவும், சுவாதி மற்றும் ராம்குமார் குடும்பத்தினரிடமும் காவல் துறையினரிடமும் போட்டுக்காட்டிய பிறகே படம் சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்டு படம் வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டனர்.
ராம்குமாரை குற்றவாளியாக சித்தரித்து படம் எடுக்கவில்லை எனவும், படத்தில் லாபம் கிடைத்தால் ஸ்வாதி ராம்குமார் குடும்பத்திற்கு தருவோம் எனவும் தெரிவித்தனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.