
இளைய தளபதி விஜய் எந்தளவு தனது டான்ஸ் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாரோ அதேயளவு தனது ரசிகர்கள் மேலும் நம்பிக்கை வைத்திருக்கிறார். எப்போதும் அவர்களுடன் டச்சில் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் அவரது ஆல்டைம் எய்ம்! தினம் தினம் தன்னை புது ஆங்கிளில் ரசிகர்கள் ரசிப்பதால் அடிக்கடி அவர்களுக்கு தன்னைப் பற்றிய தகவல்களை அப்லோடு செய்து, அப்டேடட் ஆக வைத்திருக்கிறார்.
விஜய் நேரடியாக சமூக வலைதளங்களில் வலம் வருவதில்லை. ஆனால் அவருக்காகவே ஒரு க்ரூ இயங்கிவருகிறது. அந்த வகையில் ஹாட் ஆன்லைன் பேர்டாக இருக்கிறார் விஜய். அவரது சினிமா சம்பந்தமான அஃபீசியல் தகவல்களை சம்பந்தப்பட்ட நிறுவனம் பதிவிட்டுக் கொள்ளும்.
ஆனால் படப்பிடிப்பு தளங்களில் தலைவர் ரிலாக்ஸ்டாக இருப்பதையும், சமூக பிரச்னைகளில் அவரது ரியாக்ஷனையும், நெகிழ்வான மனிதர்களை அவர் சந்தித்து அவர்களுக்கு நிதியுதவியோ அல்லது மன தைரியமோ தருவதையெல்லாம் உடனுக்குடன் ஆன்லைனில் அப்லோடுவதுதான் இந்த க்ரூவின் வேலை.
மெரீனாவில் ஜல்லிக்கட்டு போராட்ட களத்துக்கு தளபதி முகத்தில் ஒரு கைக்குட்டையை கட்டியபடி நள்ளிரவு விசிட் அடித்ததையும், தேசத்துக்காக உயிர் தந்த ராணுவ வீரரின் செல்ல சிறு மகளை அவளது வீட்டுக்கே சென்று அவர் கொஞ்சி மகிழ்ந்ததையும் நொடி பிசகாமல் விவரித்தது அவர்கள்தான்.
இது போக தனது அதிகாரப்பூர் ட்விட்டர் கணக்கில் கேள்விகளை கேட்கச்சொல்லி ரசிகர்களுடன் நெருக்கத்தை மேலும் வளர்க்கிறார் விஜய். மூன்று மாதத்துக்கு ஒரு முறை அவர்களை சந்தித்து போட்டோ, டிஃபன் என்று உற்சாகப்படுத்துகிறார். சமீபத்தில் ஆன்லைனில் வைபரண்டாக இயங்கும் ரசிகர்களுக்கென தனி போட்டோ செஷனும் நடத்தினார்.
இதுபோக விழாக்காலங்களில் தனியார் டி.வி.களுக்கு விரிவான பேட்டியும் கொடுத்து பொதுவான சினிமா ரசிகர்களுடனும் நெருக்கத்தை வளர்த்துக் கொள்கிறார். அதுவும் ஸ்டுடியோவில் வைத்து பேட்டி என்றில்லாமல் சில நேரங்களில் தனது வீட்டுக்கே வரவழைத்து, அதுவும் தனது படுக்கை அறை வரை கூட கூட்டிச்சென்று ஃப்ரேம் வைக்க அனுமதிக்கிறார்.
இப்படி பப்ளிக் மத்தியில் பப்ளிக்குட்டியை இளைய தளபதி தேடிக் கொள்வது பிற்காலத்தில் அரசியலுக்கு வருவதற்காக கூட இருக்கலாம் என்று ஒரு விமர்சனம் இருக்கிறது.
ஆனால் அதை என்றுமே விஜய் மறுத்ததில்லை. காரணம், உண்மையை ஏன் மறுக்க வேண்டும்? இல்லையா இளைய தளபதி!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.